என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி சாவு"
- 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- ரோப்கயிறு வேகமாக சுற்றியதால் அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே வைரம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேக் (33). இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில் சித்தாளந்தூரை சேர்ந்த கார்த்திக் (32), நவீன்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி சேற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதை தொடர்ந்து உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என டிராக்டர் மூலம் ரோப்பை கட்டி அதன் மூலம் கார்த்திக் மேலே வர முயற்சித்த போது திடீரென ரோப்கயிறு வேகமாக சுற்றியதால், அதில் நிலை தடுமாறி கார்த்திக் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்துள்ளா ர்.
- ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (22). இவரது தந்தை ராஜதுரை, தாய் மகாலட்சுமி, அண்ணன் சூர்யபிரகாஷ் (35), கணவர் ஜீவா. இவர்கள் 5 பேரும் கூலித்தொழிலா ளிகள். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேலைக்கு வந்த இவர்கள் 5 பேரும், சம்பவத்தன்று அதிகாலையில் பெருந்துறை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு படுத்திருந்தனர்.
அப்போது மது போதையில் இருந்த ராஜதுரை, சூர்யபிரகாஷ், ஜீவா ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுபோதை யில் அருகில் உள்ள மேம்பா லத்தில் குறுக்கும் மறுக்கு மாக ஓடிய சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து ள்ளா ர்.
இதில் த லையில் பல த்த அடி ப்ப ட்டு கிடந்த அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவ மனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சூர்யபிரகாஷ் இறந்து விட்டதாகத் தெரிவி த்தார்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்த சோகம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக அறுவடை எந்திரத்தை வரவ ழைத்தருந்தன.
இதில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 23) என்பவர் நெல் அறுக்கும் எந்திரந்தை ஓட்டி வந்தார்.
நெல் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது திடீரென தினேஷ் குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தினேஷ் குமார் 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் இறந்திருக்கலாம் என கூறுகின்றன.
மேலும் இது சம்பந்தமாக தினேஷ் குமார் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ேமலும் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரபு தனது நண்பர்களுடன் கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
- குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அணைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் பி.எஸ்.என்.எல். காண்ட்ராக்ட் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிரபு தனது நண்பர்களான ராஜா, சின்னசாமி ஆகியோருடன் சம்பவத்தன்று அரேபாளையம், வனப்பகுதியில் உள்ள கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து பிரபுவின் தாய் சின்னபொண்ணு அளித்த புகாரின்பேரில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்