search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிப்பு.

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. லீக் சுற்றை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற பரபரப்பான கட்டத்தில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மே 14 ஆம் தேதி (இன்று) மாலை ஆறு மணிக்கு துவங்குகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். நாளை (மே 15) மாலை 6 மணிக்கு பிளே ஆஃப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் ருபே அல்லாத மற்ற கார்டுகளை பயன்படுத்துவோர் கலந்து கொள்ளலாம்.

    ஐ.பி.எல். 2024 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ருபே கார்டு பயன்படுத்துவோர் மட்டும் டிக்கெட் வாங்கிட முடியும். மே 21 ஆம் தேதி ருபே அல்லாத மற்ற கார்டு பயன்படுத்துவோர் டிக்கெட் வாங்கிட முடியும். 

    • ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

    இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின.

    அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 460 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது

    • நேற்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
    • சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    • பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது குஜராத் அணி.

    அகமதாபாத்:

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருந்தது.

    ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேறியது.

    • சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்
    • சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீதமுள்ள நான்காவது இடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி பெரிய வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும். அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுப்பதாக வைத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை பெங்களூரு அணியால் முந்த முடியும். மேலும், போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் 14 புள்ளிகளை பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 18 என்ற நம்பர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • இஷாந்த சர்மா ஓவரில் விராட் கோலி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசினார்.
    • கடைசியில் விராட் கோலி விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தி அவரை கிண்டலடிப்பார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி தரப்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இஷாந்த் சர்மா பந்து வீச வரும் போது விராட் கோலியிடம் வம்பு இழுப்பார். அந்த ஓவரில் முதல் பந்தை விராட் பவுண்டரியும் 2-வது பந்தை சிக்சரும் விளாசுவார். உடனே இஷாந்த் சர்மாவை பார்த்து விராட் கோலி சிரித்தபடி ஏதோ கூறுவார். அதனை தொடர்ந்து வீசிய பந்தை டாட் பந்தாகவும் அடுத்த பந்தை வைடு பந்தாகவும் இஷாந்த் வீசுவார்.

    4-வது பந்தில் விராட் கோலியை இஷாந்த் சர்மா அவுட் செய்வார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா விராட் கோலியை சிரித்தப்படி கிண்டல் செய்வார். விராட் கோலியும் பதிலுக்கு சிரித்தபடியே கடந்து செல்வார். நண்பனிடம் அவுட் ஆவதும் சந்தோஷம்தான் என்பது போல விராட் சிரித்தப்படி செல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதனை தொடர்ந்து டெல்லி அணியின் கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா களத்திற்குள் வருவார். அவர் வரும்போதில் இருந்தே விராட் கோலி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக இதுபோல நண்பர்கள் இந்த வீடியோவை தனது நண்பர்களை Tag செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 5, 6, 7-வது இடங்களில் உள்ளன.

    குஜராத் டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

    • சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
    • அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ஆனார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொரில் ஹோம் கிரவுண்டில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.

    மேலும், இந்த போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதே போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து பிராவோ 44 விக்கெட்டுகளையும், மார்கெல் 36 விக்கெட்டுகளையும், ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், பொலிஞ்சர் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

    • கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை குவித்தார்.
    • பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.

    டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    188 ரன்களை இலக்காக துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மெக்கர்க் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் போரெல் 2 ரன்களில் அவுட் ஆக ஷாய் ஹோப் 23 பந்துகளில் 29 ரன்களை அடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 57 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் ரஷிக் சலாம் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    19.1 ஓவர்களில் டெல்லி அணி அனைத்து விக்கெட்டுளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு சார்பில் யாஷ் தயால் மூன்று விக்கெட்டுகளையும் பெர்குசன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.
    • தினேஷ் கார்த்திக் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இப்போட்டியில் பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார்.

    இதன் மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் ரோகித் சர்மாவும் மேக்ஸ்வெல்லும் 2-ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளார்.

    ×