search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருதுராஜ் கெய்க்வாட்"

    • டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.
    • சென்னை கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கேப்டனாக எம்.எஸ். டோனி விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், சென்னை அணி கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் டாஸ் சமயத்தில் தனது புதிய பொறுப்பு குறித்து ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட், "பெருமையாக உணர்கிறேன். யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை."

    "கேப்டன் மாறப்போவது பற்றி கடந்த வாரம் எனக்கு தெரியும், ஆனால் எம்.எஸ். டோனி கடந்த ஆண்டே இதை சூசகமாக தெரிவித்தார். இங்கு அனைவரும் அனுபவம் மிக்கவர்கள், வருத்தம் அளிக்கும் வகையில், கான்வே மற்றும் பதிரானா அணியில் இல்லை," என்று தெரிவித்தார்.

    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
    • அணியில் என்னை வழிநடத்த பலர் உள்ளனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். புதிய கேப்டனை எம்.எஸ். டோனியே தேர்வு செய்த நிலையிலும், இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

     


    அப்போது பேசிய அவர், "அருமையாக இருக்கிறது. இது ஒரு பாக்கியம். இது மிகப்பெரிய பொறுப்பு, ஆனாலும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் பக்கம் பலரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், நான் அதிகம் எதையும் செய்ய வேண்டியிருக்காது. மேலும் எம்.எஸ். டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த அணியில் உள்ளனர். இதனால் நான் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 அணிகள் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.
    • அந்த வகையில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான அனைத்து அணி கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

    இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 அணிகள் கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான அனைத்து அணி கேப்டன்களும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் இடம் பெற்றிருந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் டோனி சாதாரண வீரராக மட்டுமே களமிறங்குவார். 

    • டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
    • டோனி இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன் என ரெய்னா கூறினார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க இருக்கிறது. 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கேப்டனாக திகழும் டோனி 6-வது முறையாக கோப்பை வெல்ல சிஎஸ்கே அணியை வழி நடத்த உள்ளார்.

    கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி விளையாடிய டோனிக்கு தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

    இந்நிலையில் டோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெக்வாட் செயல்படுவதற்கு தகுதியானவர் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அடுத்த கேப்டன் யார் என்பதே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய கேள்வியாகும். ஒருவேளை டோனி கேப்டனாக விலகினாலும் கூட அவர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் போன்ற ஏதோ ஒரு வேலையில் இருப்பார். ஆனால் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்வியாகும். அது போன்ற சூழ்நிலையில் ருதுராஜ் நல்ல தேர்வாக இருப்பார். 

    எனவே எம்எஸ் டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் இம்முறை டோனி தன்னுடைய துணை கேப்டனை கைகாட்டி அவரிடம் நான் இந்த அணியை 2008 முதல் கையாண்டு வருகிறேன். இனிமேல் நீங்கள் இந்த மஞ்சள் படையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து பெவிலியனில் உட்காருகிறேன் என்று சொல்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது 42 வயதாகும் டோனி தன்னுடைய வருங்காலத்தை எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்ப்பது முக்கியம். அவர் இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் ஏமாற்றம்.
    • அறிமுக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்து வீரர்கள் ஓட்டல் அறைக்கு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் செல்போனை பார்த்தபடி பேருந்து அருகில் வந்து படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தானியங்கி கதவு மூடிக்கொண்டது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அதிர்ச்சி அடைந்தார்.

    ருதுராஜ் போட்டியில் விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கேப்டன் கே.எல். ராகுல் கதவை மூடியிருப்பார். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் டிரைவர் கதவை மூடியிருப்பார்என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • 2-வது போட்டியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர்.
    • 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

    5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதி வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்நிலையில் முதல் டி20 போட்டியில் ருதுராஜ் பந்து ஏதும் சந்திக்காமலே ரன் அவுட் முறையில் வெளியேறினார். இதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் டி20 போட்டியில் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் ருது பாய். அது என் தவறு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ருதுராஜ் அடக்கம் மற்றும் மிகவும் அரவணைக்கக் கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
    • 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.

    5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    மும்பை:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் அறிவித்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே.வின் தொடக்க வீரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான ருதுராஜ் கெய்க் வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம்துபே, ஜிதேஷ்சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஸ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மவி, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளனர். யாஷ் தாக்கூர், சாய்கிஷோர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட் டுப் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படு வதை உறுதி செய்வதே எனது நோக்கமாகும்.

    எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பானதாக கருதுகிறேன். ஆசிய விளையாட்டு போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வெல்வதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கும். இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    • திருமணத்திற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகல்
    • ருதுராஜ் கெய்க்வாட் மனைவியும் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

    சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

    7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது. உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பதை குறிப்பிடத்தக்கது.

    ×