search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள் உயிரிழப்பு"

    • கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார்.
    • சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் அருகே உள்ள உசிலம்பட்டி நல்லுதேவன்பட்டியை சேர்ந்த பாண்டி. இவரது மனைவி பின்னியம்மாள். இவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே மாட்டு கொட்டகை ஒன்றை அமைத்து அங்கு பசு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வந்தனர்.

    இவைகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாடுகள், ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டன.

    இதை தொடர்ந்து கால்நடைகளுக்கு பின்னியம்மாள் தொட்டியில் தண்ணீர் வைத்து விட்டு சென்று விட்டார். இதற்கிடையில் நள்ளிரவில் மாடுகள், ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. உடனே பின்னியம்மாள் கொட்டகைக்கு சென்று பார்த்தார். அங்கு 3 மாடுகள், 1 ஆடு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பின்னியம்மாள் கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த 3 பசு மாடுகள், ஆடுகளை சோதனை செய்தனர். இந்த சோதனையில் கால்நடைகள் யூரியா கலந்த தண்ணீர் குடித்து இறந்தது தெரிய வந்தது.

    முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தண்ணீரில் விஷம் கலந்தார்களா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தொள்ளாழி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நாள்தோறும் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம்.

    இந்த நிலையில் பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விநாயகமூர்த்தி மேய்ச்சல் நிலத்திற்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்து, மின்சார கம்பிகள் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டு உடனடியாக வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    அருகில் சென்று பார்த்தபோது மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து காணப்பட்டது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கியது.

     கடலூர்:

     கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமி (வயது50) அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி (40) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் அவரவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் 1 மாடும் முத்து மகன் அய்யாசாமியின் 2 மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் நடேசன் அவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    பின்னர் மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமி மற்றும் முத்து மகன் அய்யாசாமி ஆகிய 2 பேருக்கும் கண்பார்வைs பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்து போன மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×