search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பெண்"

    • மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர்.
    • அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கிராமத்தில் மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடிப்போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். நண்பர்களாக இருந்தவர்கள் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்பிறகு மணப்பெண்ணின் 35 வயதுடைய தாயும், மணமகனின் தந்தையும் அடிக்கடி சந்தித்து உள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் படிப்படியாக காதலாக மாறியுள்ளது.

    ஜூன் 17ம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடி போயுள்ளார்.

    இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னெவென்றால், மணமகனின் தந்தைக்கு 10 குழந்தைகளும் மணமகனின் தாயுக்கு 6 குழந்தைகள் உள்ளனர் என்பது தான்.

    எஸ்பி உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • ​​மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
    • காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் அஞ்சலி (18) என்பவருக்கும் திலீப் (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

    பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.

    இதை பார்த்து கோவமான மணப்பெண் போலீசுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப், அவரது மூத்த சகோதரர் தீபக், அவரது மாமா மாதா பிரசாத் மற்றும் அவரது தந்தை ராம்கிரிபால் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் உறவினர்கள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர். பின்னர் திருமண சடங்குகள் முடிக்கப்பட்டன.

    • உத்தரகாண்டின் ருத்ராபூரில் மணப்பெண் போல் நடித்து ஒரு பெண் பலரை ஏமாற்றியுள்ளார்.
    • ஜெயிலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் உறுதியானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உள்பட 7 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.

    அந்த பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சிறையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

    மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.

    • ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில்' எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
    • அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    மத்தியபிரதேச மாநிலத்தில் 29 வயது இளைஞரான ரத்தோர் தன்னுடைய ரிக்ஷாவில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என விளம்பரம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கு பெண் தேடாமல் தனது பெற்றோர் பிரார்த்தனை மட்டுமே செய்து வந்ததால், விரக்தியடைந்த தீபேந்திர ரத்தோர் திருமண வரன் பார்க்கும் குழுவில் இணைந்துள்ளார். அங்கும் அவருக்கு பெண் கிடைக்கத்தால் மனமுடைந்த அவர் வித்தியாசமான முறையில் 'எனக்கு மணப்பெண் வேண்டும்' என தன்னுடைய சொந்த ரிக்ஷயாவில் விளம்பரம் செய்துள்ளார்.

    அந்த விளம்பரத்தில் ரத்தோரின் வயது, உயரம், பிறந்த தேதி, ரத்தப் பிரிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

    இது தொடர்பாகப் பேசிய ரத்தோர், "எந்த சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய மனைவியாக வருபவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

    • ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.

    நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-

    அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    • தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார்.
    • அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார்.

    ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது.

    இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து திருமணம் செய்ததால் முதலிரவு அன்றே குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம்பெண். இவர் தவறான உறவால். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர்.

    மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல சம்பளத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியது.

    டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்தனர். பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதே என கேட்டனர்.

    அப்போது சமீபத்தில் பெண்ணுக்கு கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் தான் அவரது வயிறு வீங்கியுள்ளது.

    இன்னும் சில நாட்களில் குறைந்து விடும் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறி சமாளித்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி டெல்லியில் வாலிபருக்கும் இளம்பண்ணுக்கும் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஐதராபாத் வந்துவிட்டனர்.

    திருமணத்தன்று இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் மணமகன் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார்.

    தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார்.

    உள்ளே வந்ததும் மனைவியை அன்போடு மாப்பிள்ளை வரவேற்றார். அப்போது கட்டிலில் அமர்ந்த மணப்பெண் திடீரென வயிறு வலியால் துடித்தார். தனக்கு வலி அதிகமாக இருப்பதாக கூறி அலறி கூச்சலிட்டார்.

    இதனால் பதறிப்போன மாப்பிள்ளை உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். காரில் இளம்பெண்ணை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இளம்பெண் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு ஆத்திரமும் ஏற்பட்டது.

    இதற்கிடையே இளம்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர். இது குறித்து உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து உடனடியாக நொய்டா சென்றனர்.

    மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டோம். நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாப்பிள்ளையிடம் கெஞ்சினர்.

    ஆனால் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்தனர். இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து நொய்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் மணமகனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அனிதா முடிவு செய்தார்.
    • திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி அனிதா தெரிவித்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு இசக்கிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இதனிடையே மூத்த மகளான அனிதாவுக்கும் கட்டாலங்குறிச்சியை சேர்ந்த யோசேப்பு மகன் சாமுவேல் கில்டன் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பி.ஏ. தமிழ்த்துறை 3-ம் ஆண்டு படித்து வந்த அனிதா தேர்வை எதிர்நோக்கி இருந்தார். திருமண நாளான 25-ந்தேதி (நேற்று) அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஏனென்றால் அதே நாளில் தான் அவருக்கான கல்லூரி தேர்வும் நடப்பதாக இருந்தது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிதா முந்தைய தேர்வுகளில் எல்லாம் முதலிடத்தை பிடித்து வந்துள்ளார். திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், தனது எண்ணம் ஈடேறுமா என்று தவித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட மணமகன் உடனடியாக அனிதாவின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் இருவருக்கும் காயல்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு சென்றனர். குறித்த நேரத்தில் அனிதா தேர்வை எழுதினார். அவரை கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • காலை திடீரென மணப்பெண் மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாழைக்கரையை சேர்ந்த 24 வயதான பட்டதாரி இளம்பெண்ணு க்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இன்று திருமணம் நடைபெற இருந்தது.அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர்.

    உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்ததுடன், தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்க அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை திடீரென மணப்பெண் மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த இரு வீட்டாரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் மாயமான மணப்பெண் தாராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இதனால் திருமணம் பிடிக்காமல் அந்த வாலிபருடன் மணப்பெண் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்றிரவு முதல் திருமண மண்டபம் களை கட்டியிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் இன்று களை இழந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணமகன் தான் செய்தது தவறுதான், மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட போதிலும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட நகைகளை திரும்ப கேட்டார்.

    சமாதானம் செய்ய முடியாமல் திணறிய போலீசார், வேறுவழியின்றி மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
    • திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து மணப்பெண் பேசி இருக்கிறார்.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார்.

    இந்த தகவல் மணமகனின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். அடாவடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மணமகனிடம் ஒரு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் மணமகனோ அவரை ஏற்க மறுத்து ஆவேசமாக பேசுகிறார்.

    இதுதொடர்பாக விசாரித்தபோது காதலனை மணப்பெண் சந்தித்த தகவலை மணப்பெண்ணின் தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. மணமகள் கெஞ்சும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது.
    • ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர்.

    இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், கலெக்டர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது.

    ஊர்வலகத்தின் போது திருமண உடையில் குதிரையில் மிடுக்காக சென்றாலும், கலெக்டர் அலுவலகம் சென்றதும் அவர்களது முகத்தில் கவலை தொற்றி கொண்டது. கலெக்டரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:-

    எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இதனால் திருமண வயதை அடைந்த பிறகும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசே பொறுப்பு. கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×