என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல் டெஸ்ட் போட்டி"
- இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிப்பு.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் (நாளை) தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
F,G,H அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
I,J,K லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
KMK டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வரால், சுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர்.
சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேலுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
- நியூசிலாந்து 291 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் மெட் ஹென்றி அதிரடியாக விளையாடினார்.
- இலங்கை அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்து இருந்தது.
நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து இருந்தது.
இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 291 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் மெட் ஹென்றி அதிரடியாக விளையாடினார். அவர் 75 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்.
மிட்செல்- ஹென்றி ஆட்டத்தில் நியூசிலாந்து சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 107.3 ஓவரில் 373 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பெர்னாண்டோ 28 ரன்னிலும், கருணரத்னே 17 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது.
- ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி தனது 9வது சதத்தை பதிவு செய்தார். அவர் 120 ரன்னும், ஜடேஜா 66 ரன்னும் (அவுட் இல்லை), அக்ஷர் படேல் 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். டாட் மர்பி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 144 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஜடேஜா 70 ரன் எடுத்து இருந்த போது மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார்.
அவருக்கு கிடைத்த 6-வது விக்கெட்டாகும். ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 328 ரன்னாக இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு அவரும், அக்ஷர் படேலும் இணைந்து 88 ரன் எடுத்தது. அடுத்து முகமது ஷபி களம் வந்தார். இந்திய அணி தொடர்ந்து ரன்களை குவித்தது. இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றம் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
- இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.
- இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
- இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இதனால் முன்னிலை ரன்களுடன் சேர்த்து வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்சில் விளையாடிய வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், வங்காளதேச அணி வெற்றி பெற கடைசி நாளில் 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
இன்று ஆட்டம் தொடங்கிய 1 மணி நேரத்தில் இந்திய அணி வங்கதேச அணியின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- சட்டோகிராம் மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- ரோகித் சர்மா விலகியதால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்றும் 2வது டெஸ்ட்டில் அவர் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக புஜாராவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்மான் கில்லுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அல்லது சௌராஷ்டிரா அணி வீரர் ஜெய்தேவ் உன்கட் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உத்தரபிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமாரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேற, வங்காளதேசத்துடனான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்