என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முற்றுகையிட்ட பொதுமக்கள்"
- 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் அந்த வார்டு கவுன்சிலரிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 30 பேர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பு போல 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
- மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை சிப்காட்டில் ஆடைகள் தயாரிப்பு மில் ஒன்றின் கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி ஓடைகாட்டூர் குளத்துக்கு சென்றது.
பின்னர் அங்கிருந்து பாலத்தொழுவு கிராமம் குளத்துக்கு பாய்ந்தது. பால த்தொழுவு குளத்தில் அத்தி க்கடவு -அவிநாசி திட்டத்தில் நீர் நிரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் குளத்தில் கலந்த கழிவுநீர் மாதிரியை பாட்டிலில் எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாங்கள் கொண்டு சென்ற குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பழனிச்சாமி மாவட்ட பொறியாளர் பணி நிமித்தமாக சத்தியமங்கலம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் தரத்தை சோதித்து தருவதாக கூறினார்.
மேலும் வாரியத்தின் மூலமும் மக்கள் எடுத்த இட த்தில் மாதிரி நீரை சேகரித்து சோதனை செய்வ தாக கூறியுள்ளார். அதை ஏற்காத மக்கள் உடனடியாக தண்ணீரின் தரத்தை சோதி க்குமாறு கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை பொறி யாளர் ஆறுமுகம் அலு வலகத்திற்கு வந்தார். சிப்கா ட்டில் தனியார் மில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஆய்வுக்கு தண்ணீர் எடுத்து ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தருவதாக கூறி னார்.
மேலும் மக்கள் கொடுத்த மனு வுக்கு ஒப்புகை சீட்டு வழங்கி னார். இதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.
- சொசைட்டி காலனிக்கு என்று சிறுவர் பூங்கா மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
- ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா இடத்தில் குடியிருப்பவர்களின் எதிர்ப்பை மீறி கடை கட்டுவதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிடமனேரி பகுதியில் சொசைட்டி காலனி அமைந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி கூட்டுறவு கட்டிட சங்கம் லிட் கே.கே. 145 சார்பில் 72 வீட்டு மனை களாக பிரிக்கப்பட்டு அதில் 65-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த சொசைட்டி காலனிக்கு என்று சிறுவர் பூங்கா மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு பிடமனேரி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தனி ரேஷன் கடை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் அதற்கு உண்டான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்யாமல் சொசைட்டி காலனி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா இடத்தில் குடியிருப்பவர்களின் எதிர்ப்பை மீறி கடை கட்டுவதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நகரப் பகுதியில் சிறுவர்களுக்கு என விளையாடுவதற்கு இடவசதிகள் இல்லாமல் சிறுவர்கள் தெருக்களில் விளையாடி வரும் நிலையில் சொசைட்டி காலனியில் இடம் ஒதுக்கப்பட்டும் அந்த இடத்தில் தற்போது ரேஷன் கடை கட்டுவது சொசைட்டி காலனி முதியோர்களுக்கும், சிறுவர்களுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
- ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ளது ஈங்கூர். இங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து புலவனூர் செல்லும் ரோடு வேலை கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் பாலம் அமைப்பதற்கான குழி தோண்டிய நிலையில் வேலை நடைபெறாமல் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது.
பல்வேறு முறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் , பஞ்சாயத்து நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
பின்னர் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக எம்.எல்.ஏ. விரைந்து சென்றார்.
அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விரைவில் நடவடிக்கை எடுத்து ரோடு வேலை மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா ளையம் ஊராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கு ஊராட்சி தலைவராக விமலா(அ .தி.மு.க), துணைத்தலைவராக வினோத்குமார்(திமுக), வார்டு உறுப்பினராக ரதிமனோகர் (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலராக ரவிக்குமார்(தி.மு.க) ஆகியோர் உள்ளனர்.
இதில் 10-வது வார்டுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துதல், குப்பை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் விமலா, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோரை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் புதிதாக சாலை பணி தொடங்க வந்த எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ் இது பற்றி அறிந்ததும் உடனடியாக சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் குப்பை எடுக்க வருபவர்கள் வீட்டுக்கு ரூ.100 கேட்டு வருவதாகவும், 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.
மேலும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அப்புறப்படுத்ததால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. இதற்கு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.இதையடுத்து ஏ. கே செல்வராஜ் எம்.எல்.ஏ., கூறும் போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உரிய அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்