search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 293549"

    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
    • சிறுவர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா வின் சுற்றுவட்டார பகுதிக ளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ள தால், மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களை, சிறு வர்கள் சாலைகளில் அதிக வேகமாக ஓட்டி செல்கின்ற னர். இதனால் சாலையில் நடந்து செல்வோர் அச்சப்ப டுகின்றனர். சில நேரங்களில் வாகனங்களை கட்டுப்ப டுத்த முடியாமல் சாலையில் விழுந்து காய மடைகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், போலீசார் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமத்தி வேலூரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆ ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில், இரு சக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறுவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது. சிறுவர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனத்தை பெற்றோர்கள் கொடுத்து விடுகின்றனர்.

    எனவே இருசக்கர வாக னத்தை ஓட்டி வரும் சிறு வர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    • கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது.
    • திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

    வெள்ளகோவில்:

    கோவை -திருச்சி பிரதான சாலையில் வெள்ளகோவில் அருகே இரட்டை கிணறு என்ற இடத்தில் சாலையோரத்தில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றிற்கு தடுப்பு சுவர் இல்லை .அதற்கு பதிலாக தற்காலிகமாக தகரத்தாலான தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பு வைக்கப்பட்டு இருப்பதால் இரவு நேரங்களில் இருபுறமும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமில்லாமல் தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது

    இந்த சாலையின் வழியாக திருப்பூர், கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலத்திற்கும் கிழக்கு மார்க்கமாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். ஆகையால் உடனே இந்த பிரதான சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் தடுப்பான்களை அகற்றி பாதுகாப்பான நிலையில் கிணற்றின் அருகே தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமாறு வாகன ஓட்டிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவிபட்டினத்தில் 4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ரோட்டில் ஈ.சி.ஆர். ஜங்ஷனில் ராமேசுவரம் ரோடு, மதுரை ரோடு, தேவிப்பட்டினம் ரோடு மற்றும் ராமநாதபுரம் ரோடு ஆகிய 4 முக்கிய சாலைகள் சந்திக்கினறன.

    பஸ், ஆட்டோ, வேன், லாரி தவிர கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் தேவிபட்டினம் நவபாஷாண கோவில், ராமேசுவரம் மற்றும் திருப்புல்லாணி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கிறது. இந்த சந்திப்பில் 4 புறமும் இருந்து வரும் வாகனங்க ளுக்கு தெரியும் வகையில் தானியங்கி சிக்னல்கள் இருந்தன. இவை அனைத்தும் தற்போது செயல்படாமல் பழுதாகியுள்ளது.

    பல மாதங்களாகியும் சிக்னல்களை சரி செய்யவில்லை. இங்கு ரவுண்டானாவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரிய அளவில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க முடியும், என இப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

    • தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் ஓடை குறுக்கே செல்வதால் தண்ணீர் செல்வதற்கு வழி அமைத்து பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து செல்வதற்கு அமைக்கப்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்யாமல் உள்ளனர்.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் சைக்கிளில் அவ்வளியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் பொழுது பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்லும் வாகனங்கள் பள்ளத்திலே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட 108 ஆம்புலன்ஸ் அவழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தினால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

    ×