என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இறைச்சி பறிமுதல்"
- பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
- 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
அதில் பார்சல் பெட்டியில் ஆட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த குழுவினர் அந்த ரெயிலில் இருந்த இறைச்சியினை பரிசோதனை செய்தனர்.
அப்போது முறையாக பதப்படுத்தாமல், சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
3 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை சென்னைக்கு கொண்டு வந்து ஓட்டல்களில் சப்ளை செய்ய இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 1½ டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து மாநகராட்சி கால்நடை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கெட்டுப்போன அந்த இறைச்சியை பரிசோதனை செய்த பிறகு தான் அதன் தன்மை தெரிய வரும் என்று தெரிவித்தனர்.
- தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
- இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15 உணவகங்களில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் 5 உணவகங்களில் இருந்து காலாவதியான 16 கிலோ கோழி இறைச்சி, உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. 5 உணவக உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
- 100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதுபோன்ற அதிரடி சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவகோட்டை
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.
இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை பயன்படுத்தப் பட்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய் அதிகளவு ரசா யன பொடி கலந்த உணவு கள் பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு கடைக ளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதித்தனர். சிறிய பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உணவகங்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட சுமார் 50 கிலோவுக்கு மேற் பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோன்ற அதிரடி சோதனை தொட ரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
- 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாமக்கல்லில் சவர்மா சிக்கன் உணவு சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலும் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து தரமில்லாத உணவுகளை சமைத்து பரிமாறிய உணவகங்கள் மீது பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக 307 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1187 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 115 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி 61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, அசைவ உணவகங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
- ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
சென்னை:
சென்னையில் சுகாதாரமற்ற மற்றும் உண்ணத் தகுதியற்ற இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே (சிக்னல் அருகே) ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அங்கு புறப்பட தயாராக இருந்த வாகனத்தை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த வாகனத்தில் 800 கிலோ அளவில் கன்றுக்குட்டி இறைச்சி இருப்பதும், அது கெட்டுப்போய் இருந்ததும் சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த டிரைவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிடிபட்ட இறைச்சி கெட்டுப் போய் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. இந்த இறைச்சி நகரின் எந்தெந்த பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்றனர்.
கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேப்பேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்
- ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நக ராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று நகரப்பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 13 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் 3 கடைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக் காமலும், ஒரு கடை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த 4 கடைகளுக்கும் உணவு பாது காப்பு சட்டத்தின்படி உடன டியாக நோட்டீஸ் வழங்கப் பட்டது.
மேலும் ஒரு கடையில் 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரு கடையில் தடை செய்யப்பட் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
- புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் வள்ளிபுரத்தில் தாபா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது .இங்கு ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது .
புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர். இது போல் பணத்துக்காக சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்காதீர்கள் எனவும் தெரிவித்தனர்.
அதன் பிறகு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருணிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பெயரில் வட்ட பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உணவகத்தில் நேரடியாக ஆய்வு செய்து கெட்டுப்போன 3 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தார்.
இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக்கோரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக உரிமையாளர் செந்தில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .மேலும் இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெறுகிறது.விசாரணை முடிவில் ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்