search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அதிகாரிகள்"

    • கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.
    • பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம்.

    மகாராஷ்டிரா மாநிலம் lபுனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, "சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன.

    நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    அரசு அதிகாரிகள் பற்றி நிதின் கட்கரி தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செம்மரம் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு.
    • அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன்பிடி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி சபாவத் ராம்சந்தர் மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்த குண்டமராஜு கல்யாண்குமார் ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இருவரும் அரசு விதிகளை மீறி செம்மர கொள்முதலில் தனியார் நபர்களை ஈடுபடுத்தி அதன் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 8 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
    • ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர்.

    சென்னை:

    பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி மற்றும் சாந்தி. இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.

    இந்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சீனிவாச ராவ் ஆஜராகி பட்டா கேட்டு மனுதாரர்கள் மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் பரிசீலிக்க வில்லை. எந்த பதிலும் சொல்வதில்லை. அதனால் இந்த வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு மனுதாரர் தள்ளப்பட்டு உள்ளார் என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


     மனுதாரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடுத்த மனுவை அதிகாரிகள் சட்டப்படி பரிசீளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை 2 மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் செய்து முடிக்க வேண்டும். பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் பட்டா கேட்டும், பட்டா மாற்றத்திற்கும், நிலத்தை அளப்பதற்கும், மறு அளவீடு செய்வதற்கும், எல்லையை வரையறை செய்வதற்கும் பொதுமக்கள் ஐகோர்ட்டை நாட வேண்டியதுள்ளது. அதாவது, சிறு சிறு கோரிக்கைகளுக்காக பொது மக்கள், ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சிறு உத்தரவை பெற வழக்கு தொடர வேண்டியதுள்ளது.

    அரசு அதிகாரிகள் படைபலம், பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்களே தவிர சாதாரண குடிமக்களுக்கு வேலை செய்வது இல்லை என்று இந்த வழக்கு மூலம் தெளிவாகிறது.

    சில நேரங்களில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அரசு பிறப்பிக்கும் சுற்றறிக்கையை, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்கிறார்களா, பின்பற்றுகிறார்களா? என்பது கூட தெரியவில்லை. அதிகாரிகள் பணி செய்யாமல் இருப்பதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே இந்த உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும். அந்த உத்தரவை தலைமைச் செயலாளரும் பிற துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் இது போன்ற கோரிக்கை மனுக்களை காரணம் இல்லாமல் பரிசீலிக்காமல், நிலுவையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பாவார்கள். வழக்கை முடித்து வைக்கிறேன்

    இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்

    • கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
    • அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் குமார், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கோபால், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், நடராஜ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் உள்ளிட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், பொங்கலூர் ஊராட்சியில் செல்வக்குமார் என்பவர் வீட்டின் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்வக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணை தலைவர் மீது அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுதுறை அதிகாரிகள் மீது எந்தவித விசாரணையும் இன்றி வழக்குப்பதிவு செய்ததை கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
    • பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருக்கிறது. பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் நீடித்து வருகிறது. தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கும் போது தீய சக்தியும் உள்ளது என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

    அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பேய் ஓட்டுவது பேய்களை கட்டுப்படுத்துவது என சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. சாலைகளில் பேய் நடமாட்டம், சுடுகாட்டு பகுதியில் பிசாசு நடமாடுகிறது என பல இடங்களில் பேய்களை கண்டதாகவும் கூறுகின்றனர். பேய்க்கு பயந்து வீடுகளை காலி செய்யும் நிலைமை உள்ளது.

    வாடகை வீடுகளுக்கு செல்பவர்கள் இந்த வீட்டில் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா இளம் வயதினில் யாராவது இறந்தார்களா என கேள்வியை முன்வைத்த பிறகு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.

    அந்த அளவுக்கு பேய் பயம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இருட்டை பார்த்து பயப்படுபவர்களும் அதிகமாக உள்ளனர். இதனால் வீடுகளில் முகப்புகளில் வேப்பிலை கட்டுவது வாசலுக்கு அருகில் செருப்பு துடைப்பம் போட்டு வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    படித்தவர்கள் பெரும்பாலும் பேய் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேய் இருப்பதாக கூறி அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்காமல் புறக்கணித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா கடந்த 2012 -@ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது .கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதியதாக அலுவலகம் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.

    கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் அந்த குடியிருப்பில் எந்த ஒரு தாசில்தாரும் வசிக்கவில்லை. இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.

    இதனால் அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்-

    இந்த கட்டிடம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது .ஆனால் எந்த அதிகாரியும் குடும்பத்துடன் தங்கவில்லை. ஒரே ஒரு தாசில்தார் மட்டும் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்று விடுவார். அதன் பின்னர் யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு பணி சுமை அதிகரித்து இரவு நீண்ட நேரம் ஆனாலும் யாரும் இங்கு தப்பி தவறி கூட தங்குவதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.

    இந்த குடியிருப்பு பகுதி அருகே குறிப்பாக அமாவாசை நாட்களில் அமானுஷ்ய உருவம், பேய்கள் உலாவி வருவதாக கூறுகின்றனர். குடியிருப்புக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது.

    அங்கிருந்து இந்த குடியிருப்பு வரை அமாவாசை நாட்களில் பேய் உலவி வருகிறது. எனவே இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை தொடங்குகிறது.
    • ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    திருவையாறு:

    திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை 6-ந்தேதி மாலை தொடங்குகிறது.

    தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு அரசு சார்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் ஏராளமா னோர் வருகையை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக திருவையாறு கடைத்தெருவில் சாலை யோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சம்பந்தப்பட்ட அரசுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், தியாகராஜர் சுவாமிகளின் இசை விழா நடக்கும் தியாகராஜர் காலனி மற்றும் தியாகராஜர் சமாதிக்கு மெயின் சாலையில் இருந்து 3 வழியாகவும் ராமப்பா அக்ரஹாரம் காவிரிக் கரை சிமெண்ட் ரோடு வழியாகவும் என 4 வழிகளிலும் பொதுப்பாதை உள்ளது.

    ஆனால், ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்த முடியாததோடு, இப்பாதையின் உட்புறம் உள்ள முகாசா கல்யாணபுரம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீரை குழாயிலிருந்து திறக்கவும் அடைக்கவும் பராமரிக்கவும் டேங்க் ஊழியர் பொதுப்பாதையிலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தனியார் வீட்டின் வழியாகவே சென்று வர வேண்டியிருக்கிறது.

    இதனால் திருமஞ்சன வீதி, முத்து நாயக்கன் தெரு, செவ்வாய்க்கிழமை தெரு மற்றும் ராமப்பா அக்ரஹாரம் ஆகிய 4 தெருக்களிலிருந்து சுமார் 100 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    எனவே ராமப்பா அக்ரஹாரம் வழியாக தியாகராஜர் சமாதிக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொது மக்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×