search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2023"

    • ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    இந்நிலையில், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.
    • போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், 3 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பையில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார்
    • ஒருவர் சிறப்பாக விளையாடும்போது, அவரது திறமையை அறிய அனைவரும் விரும்புவர்

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 84 ஆகும்.

    இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மான் கில் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியும் அவரை பாராட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

    பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் விளையாட்டு, பின்பற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, ''ஆம். நிச்சயமாக நாங்கள் அவரை பின்பற்றுவோம். ஒரு வீரர் நன்றாகச் செயல்படும்போது, அவர்கள் ஏன் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? அவர்களின் சிறப்பு என்ன? என்பதைக் கண்டறிய அனைவரும் அவர்களை பார்க்கிறார்கள். . பாபருக்கும் அதுவே பொருந்தும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், நாங்கள் அனைவரும் அவரைப் போற்றுகிறோம்'' என்றார்.

    • லீக் ஆட்டம் மழையால் இந்தியா பேட்டிங் செய்ததுடன் முடிவடைந்தது
    • இன்று மழைக்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48.5 ஓவரில் 266 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும், 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விக்கெட் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டும் விக்கெட் கைப்பற்றவில்லை. பீல்டிங் மெச்சும் வகையில் இருக்கவில்லை.

    இந்திய அணியின் ரன் குவிப்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

    அத்துடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ஒருசேர முன்னேற்றம் காண வேண்டியதும் தேவையான ஒன்றாகும். குழந்தை பிறந்ததால் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து தனது மனைவியை அருகில் இருந்து கவனிக்க மும்பை வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

    இதேபோல் காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் முழு உடல் தகுதியை எட்டி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பும்ரா, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால் முகமது ஷமி, இஷான் கிஷனுக்கு இடம் கிடைப்பது கடினம்தான்.

    உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை எளிதில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். சூப்பர் 4 சுற்றில் 193 ரன்னில் வங்காளதேசத்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பாபர் அசாம், இப்திகர் அகமது, இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வானும் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்பும் நல்ல நிலையில் உள்ளனர். மேகமூட்டமான சூழல் நிலவுவது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    இந்த போட்டி இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையேயான போராக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

    இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார்.
    • இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.

    'சூப்பர்-4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    'சூப்பர்-4' சுற்றின் 3-வது ஆட்டம் கொழும்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



    இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    இந்த பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் விளையாடுவது வழக்கம். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது. அப்போது அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாழை ஆட்டிக்கொண்டு விராட் கோலி இடம் சென்றது.

    இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து மற்ற வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர். பின்னர் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம்.
    • நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது.

    முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இன்று சூப்பர் 4-ல் 2-வது போட்டி நடைபெறுகிறது. இதில் வங்காளதேசம் மற்றும் இலங்கை மோதுகிறது. நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் விளையாடி வருகிறோம். நாங்கள் டெஸ்ட் விளையாடினோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரில் விளையாடினோம். அதன் பிறகு எல்.பி.எல். விளையாடி உள்ளோம். தொடர்ச்சியாக இங்கு விளையாடி வருவதால் இந்தியாவை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

    நாங்கள் புதிய பந்தில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுகிறோம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது திட்டம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை. ஆனால் நாங்கள் அவற்றைப் பெறவில்லை.

    மிடில் ஓவர்களில் சொதப்பினாலும் போட்டியை நன்றாக முடிப்பதை நீங்கள் காணலாம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதியில் சிறப்பாக செயல்படுகின்றனர். இது ஒரு அணியின் கூட்டு முயற்சி. போட்டியில் யாராவது தோல்வியுற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் அதை சரி செய்கிறார்கள். நாளை வானிலை தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது.
    • இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதுகின்றன.

    தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து தப்பித்தது. இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, அசலங்கா, திமுத் கருணாரத்னே நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் பதிரானா, தீக்ஷனா, ரஜிதா நம்பிக்கை அளிக்கிறார்கள். உள்ளூர் சூழலில் ஆடுவது இலங்கைக்கு கூடுதல் பலமாகும்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்து சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானை (தலா 12 வெற்றி) பின்னுக்கு தள்ளிவிடும்.

    ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்4 சுற்றுக்கு வந்தது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி, பாகிஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 38.4 ஓவர்களில் 193 ரன்னில் அடங்கியது. அனுபவம் வாய்ந்த ஷகிப் அல்-ஹசன் (53 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (64 ரன்) அரைசதம் அடித்ததால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும்

    பேட்டிங்கில் சீரற்ற தன்மை அவர்களின் பலவீனமாக உள்ளது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தசைப்பிடிப்பால் விலகியது அந்த அணிக்கு இன்னொரு பின்னடைவாகும். டாப்-5 வீரர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் சவாலான ஸ்கோரை எட்டலாம். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வங்காளதேசத்தின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து விடும் என்பதால், தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டுவார்கள். மொத்தத்தில், வலுவான இலங்கையின் வெற்றிப்பயணத்துக்கு வங்காளதேச வீரர்கள் முட்டுக்கட்டை போடுவார்களா? அல்லது மீண்டும் அடங்கிப்போவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அங்கு மழை பெய்வதற்கு 68 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 120 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 74-ல் வெற்றியும், 39-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 ஆட்டத்தில் முடிவில்லை. அதே சமயம் வங்காளதேசத்துக்கு இது ராசியான மைதானம் கிடையாது. இங்கு அந்த அணி 11 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்று இருக்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 375 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். 2002-ம் ஆண்டு நெதர்லாந்து 86 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இலங்கை: பதும் நிசாங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, சமரவிக்ரமா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, பதிரானா.

    வங்காளதேசம்: முகமது நைம், லிட்டான் தாஸ், அபிப் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹரிடோய், முஷ்பிகுர் ரஹிம், ஷமிம் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமுத்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது.
    • 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முதல்தான் நகரில் தொடங்கியது.

    இந்திய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    6 லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. 3 போட்டிகள் இலங்கையில் நடந்தது. சூப்பர்-4 சுற்றின் 6 போட்டிகளில் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நேற்று நடந்தது. சூப்பர்-4 சுற்றின் எஞ்சிய 5 ஆட்டங்களும், இறுதிப்போட்டியும் இலங்கையில் உள்ள கொழும்பில் நடக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது. 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்தியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) தெரிவித்துள்ளது.

    இதற்கு இழப்பீடு கேட்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.

    இதுகுறித்து பி.சி.பி. அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஸ்ரப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் ஜெய்ஷாவுக்கு இழப்பீடு கோரிக்கையை கோடிட்டு முறைப்படி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏ.சி.சி.யின் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இடங்களை மாற்றுவதற்கான கடைசி நிமிட முடிவுகளை எடுத்ததற்கு யார் பொறுப்பு என்று அவர் தனது கடிததத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முக்கிய முடிவுகளில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எவ்வாறு பதில் அளிக்க போகிறது மற்றும் இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வங்காள தேசம் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய வங்காளதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் ஹல் உக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 39.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    • அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார்.

    லாகூர்:

    6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணி மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர். அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    ×