search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2023"

    • ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுக்கலாம்.
    • சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது ஆப்கானிஸ்தானுக்கு தெரியவில்லை.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஆட்ட அதிகாரிகளால் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆப்கானியர்கள் கூறினர்.

    37 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சூப்பர் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நுழைய ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 37-வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் தூக்கி அடித்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனால் நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஷித் கான் போட்டி முடிந்து விட்டது என சோகத்தில் இருந்தார்.

    ஆனாலும் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

    இது குறித்து ட்ராட் கூறியதாவது:-

    கூறப்பட்ட நிபந்தனைகளை அதிகாரிகள் தனது அணிக்கு தெரிவிக்கவில்லை. அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 295 அல்லது 297 ரன்களைப் பெறலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 

    • இலங்கை அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியது.
    • ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்னில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷகிடி , வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் நன்றாகப் போராடினோம், 100 சதவீதம் கொடுத்தோம். நாங்கள் விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதம் குறித்து அணிக்கு பெருமை. கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டி வடிவத்திலும் நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன்.

    இன்னும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. நாங்கள் உலகக் கோப்பைக்கு மிக அருகில் இருக்கிறோம், இங்கே நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களுக்கு ஆதரவாக உள்ள ரசிகர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா 41 ரன்னும், அசலங்கா 36 ரன்னும், துனித் வெல்லேலகே 33 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. 37.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்கள் விளாசினார். ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்டும், துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர்.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய நேபாளம் அணி 48.02 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. மழை பெய்ததால் ஓவர் குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 23 ஓவரில் 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழைக்கு பிறகு ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களுடன் நேபாள் அணி வீரர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி கொண்டனர். மேலும் நேபாள் அணியின் ஆல்ரவுண்டர் சோம்பல் காமி அவரது ஷூவில் விராட் கோலியின் ஆட்டோகிராபை வாங்கினார்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்த சோம்பல் காமி, விராட் கோலி கிரிக்கெட்டர் அல்ல, எமோசன் என தலைப்பு வைத்திருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    • மழையால் தடைபட்ட ஆட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
    • இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

    அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்நிலையில், இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அசத்தலாக விளையாடினர். அவ்வபோது 6, 4-களை அள்ளி வீசினர்.

    இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளம் அணிக்கு துவக்க வீரரான ஆசிப் ஷேக் 58 ரன்களை குவித்தார்.
    • இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

     

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
    • வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

    இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள்.
    • நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.

    பல்லகெலே:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 'ஏ' பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நேபாளமும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. பிறகு இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டு 266 ரன்கள் சேர்த்தது. அடுத்து பாகிஸ்தான் பேட் செய்வதற்குள் மழை புகுந்து விளையாடியதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    அதே சமயம் நேபாள அணி- பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் வெறும் 104 ரன்னில் சுருண்டு 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் ஆரிப் ஷேக் (26 ரன்), சோம்பால் காமி (28 ரன்), குல்சன் ஜா (13 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்.

    நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் கணிசமான ரன் திரட்டுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதே போல் இந்திய பவுலர்களும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளனர்.

    அதே சமயம் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணத்துக்காக மும்பை திரும்பியுள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார். சூப்பர்4 சுற்று தொடங்குவதற்கு முன்பாக அணியுடன் இணைவார்.

    நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள். 40 ஓவருக்கு மேலாக தாக்குப்பிடித்து விளையாடினாலே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.

    இன்றைய ஆட்டத்தையும் மழை அச்சுறுத்துகிறது. பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பிற்பகலில் மழை பெய்து போக போக அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே 'டாஸ்' போடுவதில் தாமதம் ஏற்படலாம்.

    ஒரு வேளை வருணபகவான் வழிவிடாமல் ஆட்டம் ரத்தாகி இரு அணியும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவானால், ஏற்கனவே ஒரு புள்ளியை பெற்றுள்ள இந்தியா சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். முகமது ஷமி அல்லது பிரசித் கிருஷ்ணா.

    நேபாளம்: குஷல் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பாடெல் (கேப்டன்), ஆரிப் ஷேக், குஷல் மல்லா, திபேந்திர சிங், குல்சன் ஜா, சோம்பால் காமி, கரண் கே.சி., சந்தீப் லமிச்சன்னே, லலித் ராஜ்பன்ஷி.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 334 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் சதமடித்தனர்.

    லாகூர்:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • போட்டி துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது.
    • ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட போதிலும், முதல் பாதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    இவர் அவுட் ஆன புகைப்படம் இணையத்தில் வெளியானதும், கோலிவுட்டில் ரிலீசான சென்னை 600028 படத்தில் வெளியான காட்சியை போன்றே இருக்கிறது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக, அதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.

    • முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
    • இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும். 

    ×