என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேஸ்திரி சாவு"
- சிமெண்ட்டு கல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது.
- கிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முத்துகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது45). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 10-ந் தேதி பாலக்கோட்டில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்தார்.
அப்போது சிமெண்ட்டுகல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
- ஏரி அருகில் உள்ள கிணற்றில் சின்னசாமி தவறி விழுந்து இறந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள மேட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. கட்டிட மேஸ்திரியான இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று ஒட்டப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்தார். அப்போது தோக்கம்பட்டி அடுத்துள்ள கவுண்டனஅள்ளி ஏரி அருகில் உள்ள கிணற்றில் சின்னசாமி தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனளிக்கவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 15-ந் தேதி கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக் நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கு அமைத்துள்ள மின்வேலியில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட மலையை ஒட்டிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
அவ்வப்போது வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தங்களது வயல் வெளிகளில் இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் நிலத்திற்கு அருகே உள்ள மினகம்பத்தில் இருந்து திருட்டுதனமாக மின்சாரத்தை எடுத்து கம்பி வேலிகளில் இணைத்து விடுகின்றனர்.
அதனால் வனவிலங்குள் மற்றும் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி 3 காட்டுயானைகளும், கம்பைநல்லூர் அருகே தாழ்வாக இருந்த மின்கம்பி மீது உரசி 1 யானையும் உயிரிழந்தது. மேலும் இந்த மின்வேலியில் சிக்கி மனிதர்களும் பலியாகி யுள்ளனர்.
இந்த நிலையில் பாலக்கோடு அடுத்துள்ள சூடானூர் பகுதியை சேர்ந்த வர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் அப்பகுதியில் மலையை யொட்டி உள்ளது.
அந்த நிலத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். அடிக்கடி காட்டுபன்றிகள் விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் நெல்பயிரை பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்று இரவு வயலுக்கு சென்று காட்டுபன்றிகள் எதுவும் விளைநிலத்தை சேதப்படுத்தியுள்ளதாக என பார்த்துள்ளார்.
அப்போது அங்கு அமைத்துள்ள மின்வேலி யில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனால் வெகுநேர மாகியும் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் விளைநிலத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது மின்வேலியில் சிக்கிய நவீன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினிவேன் ஒன்று சுந்தரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது75). கட்டிட மேஸ்திரியான இவர்
நேற்று முன்தினம் தனது ேமாட்டார் ைசக்கிளில் மோட்டுப்பட்டியில் இருந்து பென்னாகரத்திற்கு சென்றார்.
அப்போது அவர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற மினிவேன் ஒன்று சுந்தரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே சுந்தரத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.
- 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள சாத்து மதுரையை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவர் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது 2-வது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.
அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 39), கட்டிட மேஸ்திரி இவர் கடந்த 17-ந் தேதி குடிபோதையில் தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சம்பத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோ ணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்