search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் பிரீமியர் லீக்"

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணியில், அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

    இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 10-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் அலிசா ஹீலி 58 ரன்னும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்னும் எடுத்தனர்.

    உ.பி. அணி சார்பில் சாயிகா இஷாக் 3 விக்கெட்டும், அமீல கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடியில் இறங்கியது. யஸ்தீகா பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நட் சீவர் பிரன்ட் ஜோடி இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கவுர் 53 ரன்னும், நட் சீவர் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் மும்பை அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4வது வெற்றியையும் பதிவு செய்தது.

    • குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது.
    • ஷபாலி வர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக கிம் கார்த் 32 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். டெல்லி தரப்பில் மரிசான் கேப் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனைகளான மெக் லேனிங் 21 ரன்களும், ஷபாலி வர்மா 76 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இதனால் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, உ.பி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

    அதிரடியாக ஆடிய எல்லிஸ் பெர்ரி 39 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 52 குவித்து ஆறுதல் அளித்தார். சோபி டிவைன் 36 ரன்கள், ஸ்ரேயா பாட்டீல் 15 ரன்கள் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில், 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. உ.பி. வாரியர்ஸ் தரப்பில் சோபி எக்லஸ்டோன் 4 விக்கெட், தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் தேவிகா வைத்யா, அலிசா ஹீலி (கேப்டன்) இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி நிலைத்து நின்று வெற்றியை எட்டினர்.

    இவர்களை பிரிக்க அனைத்து பந்துவீச்சாளர்களையும் மாறி மாறி பந்து வீச செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணானது. பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட அலிசா ஹீலி 96 ரன்களும், தேவிகா 36 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    13 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியதால், 10 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் வெற்றி பெற்றது. 47 பந்துகளில் 18 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 96 ரன்கள் விளாசிய அலிசா ஹீலி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 

    • அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்தனர்.
    • 15வது ஓவரில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் மெக் லேனிங் 43 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களுடனும், கேப்டன் கவுர் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    30 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • டெல்லி அணி துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
    • அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

    துவக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.

    • மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.
    • இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் முதலாவது மகளிர் பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 6-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. 2 போட்டியில் தோல்வியை தழுவிய குஜராத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது. பெங்களூர் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

    பெண்கள் பிரீமியர் 'லீக்' போட்டியின் 7-வது 'லீக்' ஆட்டம் டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2 போட்டிளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது போட்டியில் பெங்களூரை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. டெல்லி அணி முதல் போட்டியில் 60 ரன்னில் பெங்களூரையும், 2-வது ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சையும் வீழ்த்தின.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
    • கடுமையாக போராடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 67 ரன்களும், சோபியா 65 ரன்களும் விளாசினர். பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹெதர் நைட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கடுமையாக போராடி 190 ரன்களே எடுத்தது. துவக்க வீராங்கனை சோபி டிவைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். எலிஸ் பெரி 32 ரன்களும், ஹெதர் நைட் (30 நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர். இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    • சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டியை இலவசமாக காணலாம்.
    • இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இத்தொடர் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெறும் குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டியை பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள் உள்பட அனைவரும் இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் அதிகாரபூர்வ டுவிட்டரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ஏற்கனவே, மகளிர் கிரிக்கெட் தொடரில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளையும் பெண்கள், சிறுமிகள் இலவசமாக பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    • கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

    ×