என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாரஸ் லாரி"
- லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
- பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நாகர்கோவில் கணேச புரம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் மூடப்பட்டது. சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்பட்டதால் சாலை புழுதியாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதிகள் பறப்பதால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக தொடர்கதை யாகவே உள்ளது.
இந்த நிலையில் பொட்டல் பகுதியில் இருந்து நாங்குநேரிக்கு டாரஸ் லாரியில் தும்பு ஏற்றிக்கொண்டு சென்ற டிரைவர் கணேசபுரம் சாலையில் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலையில் பைப்லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. இதைத்தொடர்ந்து டிரைவர் லாரியை இயக்க முயன்றார். ஆனால் அந்த பள்ளதில் சக்கரம் பதிய தொடங்கியது. லாரி ஒருபுறம் சரியவே டிரைவர் லாரியை நிறுத்தினார்.
லாரி நடுரோட்டில் சிக்கியதால் சாலையின் இருபுறமும் இருந்து கார் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மட்டுமே அந்த வழியாக வந்தனர். மற்றவர்கள் வாகனங்களை திருப்பி சென்றனர்.
தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரியை கிரைன் மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த லாரி கிரைன் மூலமாக மீட்கப்பட்டது. ஏற்கனவே அந்த சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் டாரஸ் லாரி டிரைவர் அந்த வழியாக வந்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- கனரக வாகனங்களை தடை செய்ய கோரி பொதுமக்கள் சித்திரங்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருந்து தினமும் இரவு, பகலாக கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்-சான்ட், என்-சான்ட், ஆகியவை கேரளா வுக்கு கொண்டு செல்கி றார்கள். அதிக வீல் கொண்ட பெரிய டாரஸ் லாரிகளில் கொண்டு செல்வதால் ரோடுகள் விரிசல் அடைந்து வெகு விரைவில் சேதம் அடைகிறது.
இரவு நேரங்களில் அதிக சக்தி வாய்ந்த வெடி பொருள்கள் வைத்து பாறையை வெடிக்க வைப்ப தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் விரிசல் அடைகிறது. இரவு நேரங்களில் அதிக அளவு சத்தத்துடன் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் வாக னங்களில் அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினருடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பல விபத்துக்கள் நடைபெற்றன. அந்த பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கனரக வாகனங்களை தடை செய்ய கோரி ஊர் பொதுமக்கள் சித்திரங் கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜஜிபி. லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஏசுராஜா முன்னிலை வகித்தார். வேர்கிளம்பி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெஜினி, சுந்தர்சிங், ராஜேஸ், ஊர் பொதுமக்கள் சந்தோஷ், ராமசந்திரன் டென்னிஸ், கிளைமன்ட், தேவராஜ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி
- சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்க ளில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனி மவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.
சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி டாரஸ் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த லாரி களியக்காவிளை பகுதியில் வந்தபோது சாலையின் நடுவில் பழுதாகி நின்றது. இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாற்று பாதையில் வாகனங்களை அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். களியக்காவிளை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலி
- லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள கல்லங்குழி நாராயணத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் அருள் தாஸ் (வயது 60). இவரது மனைவி புஷ்ப ராணி, இவர்களது மகன், மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
ஜஸ்டின் அருள் தாஸ் வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் விவசாய பணியும் செய்து வந்தார். நேற்று மதியம் அவர், மாட் டிற்கு உரம் வாங்கு வதற்காக வேர் கிளம்பிக்கு புறப்பட்டார். முண்டவிளை அருகே சென்ற போது பின்னால் டாரஸ் லாரி வந்துள்ளது. அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.
இதில் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜஸ்டின் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை கண்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கொற்றிக்கோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜஸ்டின் அருள்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை.
- நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறியை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் பனிமனை யில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்றது. தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வரும் போது எதிரே நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி எம் சேண்ட் ஏற்றி கொண்டு டாரஸ் லாறி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடி முழுவதும் உடைந்தது.
பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் டாரஸ் லாறி ஓட்டி வந்த டிரைவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்