என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணம் நகை கொள்ளை"
- கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
- கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி வி.கே.வி.நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (70).
இவர் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் மாதந்தோறும் பவுர்ணமியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அம்மன் கோவிலுக்கு மனைவியுடன் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று பவுர்ணமியையொட்டி மாலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி சுந்தரம் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து உடனடியாக மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
- துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார்.
- பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு. விவசாயி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வெளியூர் சென்று இருந்தனர். துரைக்கண்ணு மட்டும் வீட்டில் இருந்தார்.
இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக துரைக்கண்ணு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு துரைக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்தததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார். இந்த பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் துரைக்கண்ணு வீட்டில் பணம் இருப்பதை அறிந்த மர்மகும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதனால் இந்த கொள்ளையில் ஈடுபட்டது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
- மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் அங்குள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவை மாயமாகி இருந்தது.
மணிகண்டன் வெளியில் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தடயவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து வந்து இங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்