search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சை கிளி"

    • காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது.
    • ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்தவத்சலம். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    அப்போது காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது. இதையடுத்து கிளியை மீட்ட ஆசிரியர் அதனை வீட்டில் எடுத்து வந்து சிகிச்சை அளித்தார். மேலும் அதற்கு ஆண்டாள் என பெயரிட்டு ஆசையுடன் வளர்த்தும் வந்தார்.

    இதனிடையே கிளியை வீட்டில் வளர்த்துக்கொள்ள அனுமதி கேட்டு சென்னை முதன்மை வனச்சரக அலுவலருக்கு விண்ணப்பித்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் பக்தவத்சலத்தின் வீட்டிற்கு வந்தனர்.

    கிளியை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் கிளியை வனத்தில் விட அரசு ஆணை பிறப்பித்த நகலை காண்பித்தனர். இதனை தொடர்ந்து தான் ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

    • வனத் துறையினரிடம் பச்சை கிளிகள் ஒப்படைக்கப்பட்டது.
    • 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் அட்ட வணை 2-ல் உள்ள பச்சைக் கிளிகளை வீடுகளில் வளர் பது தண்டனைக் குரிய குற்ற மாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக நாடு முழுவதும் வனத் துறையி னா் வீடுகளில் கிளிகளை வளா்க்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத் துறை அலுவலா்களிடம் ஒ ப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னா். அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளா்க்கப்பட்ட 18 பச்சைக் கிளிகளை பொதுமக்கள் வனத் துறை யினரிடம் ஒப்படைத்தனா்.மாவட்ட வன அலுவலா் ஹேமலதா தலைமையில் வனத் துறையினா் கூண்டு களில் அடைத்திருந்த பச்சைக் கிளிகளை வனப் பகுதியில் பறக்க விட்டனா்.

    இந்த நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலா்கள் நித்திய கல்யாணி, நாகராஜன், ராஜ சேகரன், அருண்குமாா் மற்றும் வனத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனா்.

    • மெய்யல் வீட்டில் இருந்த கிளியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • வனத்துறையினர் தங்களது பாதுகாப்பில் கிளிகளை வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேல புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் மெய்யல் (வயது 58).

    இவர், சட்டவிரோதமாக பச்சை கிளிகள் வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் மெய்யல் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

    அங்கு இரு கிளிகள் இருந்ததையடுத்து மெய்யலை வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மெய்யல் வீட்டில் இருந்த கிளியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் தங்களது பாதுகாப்பில் அந்த கிளிகளை வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் எவரும் காட்டு பறவையினங்களையோ, காட்டு மிருகங்களையோ வீட்டில் வைத்து வளர்ப்பதை தவிர்க்குமாறும் யாரிடத்திலும் மேலே கூறியது போல் வன உயிரினங்கள் இருப்பின் உடனே அதனை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளையராஜா அறிவுறுத்தியுள்ளார்கள்.

    ×