என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 308336"
- நேற்றைய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
- பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
இதன்மூலம் பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் ஆனது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
கேமரூன் கிரீன் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2-வது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
இதே போல பியூஷ் சாவ்லா வீசிய 3-வது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் கிரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா ரன் அவுட் செய்தார்.
இந்த 2 பேரையும் ரன் அவுட்டாக்கிவிட்டதாக கருதப்படும் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், கிரீன் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 3 ரன் அவுட் லக்னோ அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியுள்ளது.
- கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.
- லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை:
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.
11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார்.
திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.
- இரு அணிகளும் முதல் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது.
- மும்பை இந்தியன்ஸ் இதுவரை ஒருமுறை கூட லக்னோ அணியிடம் வென்றதில்லை.
சென்னை:
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் இரு அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. மும்பை அணிக்கு பேட்டிங் மட்டுமே பக்கபலமாக இருக்கிறது. பந்து வீச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு வர முக்கிய காரணமாக குஜராத் - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் ஆகும். அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால்தான் மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இம்முறை வலுவான பந்து வீச்சு தாக்குதல், மிடில் ஆர்டர் பேட்டிங்கை லக்னோ அணி கொண்டுள்ளது.
குயிண்டன் டி காக், பிரேரக் மன்கட், குர்ணால் பாண்ட்யா, ஸ்டாயினிஸ், பதோனி, நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், மோஹ்சின் கான், அவேஷ்கான், நவீன் உல்ஹக், அமித் மிஷ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருடன் குர்ணால் பாண்ட்யாவும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இரு அணிகளும் முதல் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மெதுவான பிட்ச் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஸ் சாவ்லாவை தவிர எந்த அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரும் இல்லாதது மும்பை அணிக்கு பாதகமாக அமையும்.
அதேபோல லக்னோ அணியில் அமித் மிஸ்ரா, குர்ணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் ஆகிய அனுபமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சென்னை மைதானத்தில் அவர்களின் தாக்கம் மும்பை அணிக்கு பாதகமாக அமையும்.
மும்பை அணி இந்த சீசனில் பவர் ஹிட்டர்களையே நம்பி உள்ளது. கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் லக்னோ அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. கடந்த சீசனில் இரு முறையும் தற்போது ஒரு முறையும் லீக் சுற்றில் மும்பை மண்ணில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் இரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.
- புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 2-வது இடத்தில் உள்ளது.
16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், அடுத்த சுற்றான பிளேஆஃப் வருகிற செவ்வாய் கிழமை (மே.23) முதல் தொடங்குகிறது. இந்த பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றுளளது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் வரும் 20-ந் தேதி மோதுகிறது. அந்த போட்டியில் கொல்கத்தாவை சேர்ந்த ஏடிகே மோகன் பகான் கால்பந்து கிளப் அணி நிற ஜெர்சியை அணிந்து லக்னோ அணி விளையாடவுள்ளது.
நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற மோகன் பகான் அணியை பெருமைப்படுத்தும் விதமாக அந்த நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளனர். இதனை இவ்விரு அணிகளின் நிறுவனரான சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
- பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது.
- மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது. மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் 10 ஓவரில் 92 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த 10 ஓவரில் சுமாராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணியை ஒருமுறை கூட மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே இல்லை என்ற சோகம் தொடர்கிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 3 முறை மோதியுள்ளது. இந்த மூன்றிலுமே லக்னோ அணியின் வெற்றி வாகை சூடியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 21-ந் தேதி ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது.
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.
- மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் எடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.
டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் காயம் காரணமாக வெளியேறினார். மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
- லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார்.
- 2022-ல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்தது.
லக்னோ:
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் டோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.
???? ????, ???? ????, ???? ?????, ???? ?????? ??#JerseyLaunch | #LucknowSuperGiants | #LSG pic.twitter.com/u3wu5LqnjN
— Lucknow Super Giants (@LucknowIPL) March 7, 2023
இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனுக்கான புது சீருடையை வெளியிட்டுள்ளது. லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார்.
2022-ல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்த நிலையில், அவர்கள் இப்போது அடர் நீல நிற நிறத்துக்கு மாறியுள்ளனர். புதிய சீருடை வெளியீட்டு விழாவில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், தீபக் ஹூடா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரும் அணியினர் தங்கள் புதிய ஜெர்சியை வெளியிட்டனர். லக்னோ அணி கடந்த ஆண்டு ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ராகுலின் தலைமையின் கீழ் 17 ஆட்டங்களில் ஒன்பதில் வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்