என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல் மாஸ்டர் பலி"
- பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.
- டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர்.
ராஜபாளையம்:
'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வாக்குரைத்த வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் மனிதநேயம் என்றால் என்ன என கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. எந்திரத்தனமான உலகில் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதே சாலச்சிறந்தது என்று தங்களுக்குள் ஒரு கொள்கை வகுத்து விலகி செல்வதால் ஏற்படும் இழப்பு குறித்து இந்த சமுதாயம் சிந்திக்காமல் செல்வது தான் வேதனைக்குரியது.
அப்படியொரு மனிதநேய மற்ற செயலால் காந்தி ஜெயந்தியான இன்று ஒரு உயிர் சாலையோரம் பறிபோகியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்லகுற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ்கர் (வயது 50). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மற்றும் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தினமும் அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பஸ்சில் வேலைக்கு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.
வழக்கம்போல் இன்று காலை மனைவியிடம் கூறி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சென்று தனியார் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அந்த பஸ்சில் டிரைவராக மகேஷ் என்பவரும், கண்டக்டராக கோபால் என்பவரும் பணியில் இருந்தனர்.
பேருந்து புறப்பட்ட சில விநாடிகளில் மிகவும் சோர்வாக காணப்பட்ட ஜோதிபாஸ்கர் சரியான சில்லரை கொடுத்து சங்கரன்கோவிலுக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டார்.
பேருந்து ராஜபாளையம் நகருக்குள் நுழைந்தபோது திடீரென்று ஜோதிபாஸ்கருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதைப்பார்த்த பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயம் தனியார் பஸ் காந்தி சிலை ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை கடந்துதான் சென்றது.
இருந்தபோதிலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் டிரைவர், கண்டக்டர் இருவரும் வலியால் துடித்தவரை வேடிக்கை பார்த்தவாறு சென்றுள்ளனர். பின்னர் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை உருவானது.
இதையடுத்து சங்கரக்கோவில் முக்கு பகுதிக்கு பேருந்து வந்ததும் டிரைவர், கண்டக்டர் இருவரும் சேர்ந்து நெஞ்சுவலியால் உயிருக்கு போராடிய ஜோதி பாஸ்கரை பஸ்சில் இருந்து கைத்தாங்கலாக தூக்கி வந்து சாலையோரம் உள்ள டீக்கடை முன்பு அமர வைத்து விட்டு அடுத்த கலெக்சனை எதிர்பார்த்து பேருந்தை எடுத்து சென்றனர்.
இதற்கிடையே டீக்கடையை திறக்க வந்தவர்கள் கடை முன்பாக ஒருவர் படுத்துக்கிடந்ததை பார்த்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஜோதிபாஸ்கர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ வசதி இல்லாத காலத்தில்கூட உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட காலம் போய், மருத்துவமனையை கடந்தபோது கூட நெஞ்சுவலியால் துடித்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு பேருந்தை இயக்கி, அதிலும் அந்த நபரை பாதி வழியில் இறக்கி சாலையோரம் கிடத்திவிட்டு சென்று தனியார் பஸ் ஊழியர்களின் செயலால் விலை மதிப்பற்ற உயிர் பறிபோய் உள்ளது.
வேலைக்கு சென்ற கணவர், சில மணி நேரங்களிலேயே பிணமாக வீடு திரும்பியதை பார்த்து அவரது மனைவி, பிள்ளைகள் கதறித்துடித்தது காண்போர் நெஞ்சை கசக்கி பிழிந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டயர் வெடித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகன் கருணாநிதி (வயது 30) சமையல் மாஸ்டர். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் திடீரென முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற கருணாநிதி அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணிப்பேட்டையை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா குருமுடி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 63), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அல்லி. இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.
சுந்தரமூர்த்தி 10 பேருடன் மினி வேனில் திருவண்ணாமலையில் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் வேனில் வீடு திரும்பினர்.
கஸ்தம்பாடி அருகே வரும் போது வேகத்தடையில் வேன் ஏறி இறங்கிய போது வேனில் இருந்து சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த களம்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்