search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராட்கோலி"

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

    உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
    • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மெல்போர்ன்:

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

    இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

    ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

    34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

    • தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.
    • வீராட்கோலி சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.

    அவர் கிட்டத்தட்ட 3½ ஆண்டுகளுக்கு பிறகு செஞ்சுரி அடித்தார். வீராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 + ஒருநாள் போட்டி 46 + 20 ஓவர் 1) அடித்துள்ளார்.

    தெண்டுல்கரின் 100 சதங்கள் எடுத்த சாதனையை கோலி முறியடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை வீராட்கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது பெரிய விஷயம்.

    வீராட்கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    ×