search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் சுட்டுக்கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான்.
    • கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் நிமா எனும் சிறிய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியில் ஜாவேத் அக்தர் என்பவர் நிமானி டாக்டராக பணியாற்றி வந்தார்.

    நேற்று அதிகாலை ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜாவேத் அக்தர், நர்சுகள் கஜலாபர்வீன், முகமது கமில் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு 2 சிறுவர்கள் சிகிச்சைக்கு வந்தனர். அதில் ஒரு சிறுவனின் கால் விரலில் கட்டு போடப்பட்டிருந்தது.

    அதை அவிழ்த்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என சிறுவன் கூறினான். அவனுக்கு நர்சு கமில் கட்டுபோட்டார். பின்னர் அந்த சிறுவன் டாக்டர் ஜாவேத் அக்தரிடம் மருந்து சீட்டு வாங்க வேண்டும் என கூறி டாக்டரின் அறைக்கு சென்றான். அங்கு சிறுவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியில் டாக்டரை சுட்டுக்கொன்றான். பின்னர் அந்த சிறுவனும் அவனுடன் வந்த ஒரு மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டாக்டர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சந்தேகத்திற்கிடமான ஒரு சிறுவனை போலீசார் அடையாளம் கண்டனர். அவனது இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது தெரியவந்தது.


    மேலும் அந்த புகைப்படத்துடன் சிறுவனின் பதிவில், 2024-ல் முதல் கொலை என்று பெருமையுடன் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சு ஒருவருடன் டாக்டர் ஜாவேத் அக்தர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அந்த நர்சின் கணவர் சந்தேகப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அந்த நர்சின் மகளை இந்த சிறுவன் காதலித்து வந்துள்ளான். இதையறிந்த நர்சுவின் கணவர், டாக்டரை அந்த சிறுவன் மூலமாகவே கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

    அந்த சிறுவனிடம் நர்சுவின் கணவர், நீ டாக்டரை கொன்றால் எனது மகளை திருமணம் செய்து வைக்கிறேன என உறுதி அளித்துள்ளார். இதை நம்பி அந்த சிறுவன் டாக்டரை சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் இந்த கொலைக்காக நர்சின் கணவர் அந்த சிறுவனுக்கு பணமும் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.

    கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கியதாக சிறுவன் கூறியிருந்தான். இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு துப்பாக்கி விற்றவரையும், அவனுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனையும் தேடி வருகின்றனர்.

    • குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜெய்ட்பூர் பகுதியில் நிமா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை ஆகும்.

    இந்த மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 2 இளைஞர்கள் வந்தனர். அதில் ஒருவர் தனது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    அந்த இளைஞருக்கு அங்குள்ள செவிலியர்கள் கால் விரலில் உள்ள காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டனர். பிறகு அந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் உள்ள டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.

    என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டாக்டரை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். இதையடுத்து அந்த இளைஞர்களை டாக்டர்கள் அறைக்குள் செவிலியர்கள் அனுமதித்தனர்.

    அறைக்குள் சென்றதும் அந்த 2 இளைஞர்களும் டாக்டரை நெருங்கி சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் தலையை குறி வைத்து சுட்டனர்.

    குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அடுத்த வினாடி அந்த அறையில் இருந்து 2 இளைஞர்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜாவித்அக்தர் என்று தெரியவந்துள்ளது. அவர் விஞ்ஞானி டாக்டர் ஆவார். அவரை குறி வைத்துதான் 2 இளைஞர்களும் திட்டமிட்டு மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது.

    அவர்களை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர்கள் மருத்துவமனைக்குள் வரும் காட்சிகளும், தப்பி செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்று உள்ளது.

    அதை வைத்து 2 இளைஞர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக இருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    • பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார்.

    நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன் கிளினிக்கில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவரும் சென்றார்.

    கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த டாக்டர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் டாக்டர் உடலிலும் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் காரில் உயிருக்கு போராடினார்.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த பெண் டாக்டரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரிடம் அவர் கூறும் போது, எங்களை நோக்கி யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என்ன என்பதை அறிவதற்குள் என் மீது குண்டு பாய்ந்து விட்டதால் என்னால் எதையும் அறிய முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்து இருக்கலாமா?என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தப்பிஓடிய மர்ம மனிதர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×