என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறப்பு மலை ரெயில்"
- ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மலை ரெயில்களில் குடும்பத்துடன் பயணித்து வழியோரம் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர்.
மேலும் கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம்:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.
இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.
ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
- ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், அரியவகை வனவிலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட மலை ரெயில் குகைகள், அந்தரத்தில் தொங்கும் ரெயில் பாலங்களை கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதையொட்டி ஆண்டுதோறும் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டுமென ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி இந்தாண்டுக்கான சிறப்பு ரெயில்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.
இதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் பயணித்த அனைவருக்கும் சாக்லேட், ஜூஸ், 2 பிஸ்கட், கீ ஜெயின் உள்ளிட்ட பரிசுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட ரெயில் மதியம் 2.25 மணிக்கு சென்றடைந்தது.
இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள், செல்லும் வழியில் காடுகளின் இயற்கை அழகையும், வனவிலங்குகளை கண்டு ரசித்தனர்.
இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு ரூ.1,575, 2ஆம் வகுப்பிற்கு ரூ.1,065 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
- மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
- தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்- ஊட்டி, குன்னூர்- ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ெரயில் சேவை இயக்கப்படுவது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் பசுமையான காடுகள், அருவிகள், வன விலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட ெரயில் குகைகள் உள்பட இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரைச் சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி, குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு ெரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஜூன் 25-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இந்த ெரயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டி ரயில் நிலையத்துக்கு காலை 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு மலை ெரயில் புறப்பட்டு குன்னூர் ெரயில் நிலையத்துக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 16 முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சிறப்பு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும்.
மேலும், ஏப்ரல் 14 முதல் ஜூன் 25-ந் தேதி வரை ஊட்டி -கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மலை ெரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
- சிறப்பு மலை ரெயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
மலை ரெயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை ெரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை தாண்டி, இதமான சூழலில் மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி, சிற்றருவிகளை ரசித்துக்கொண்டே இம்மலை ெரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவர்.இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், மலை ரெயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
மேலும்,ஊட்டியில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதாலும், கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்ய சீட்டு கிடைக்காதவர்கள் தினசரி ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
மேலும், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ெரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ெரயிலை இயக்க ெரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் ஜூன்.24-ந் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வருகிற ஏப்.16 முதல் ஜூன்.25-ந் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ெரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதே போல் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டு ள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்