search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாக்கெட்"

    • சுதாரித்து கொண்ட பெண்கள் திருட முயன்ற நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • மணிகண்டன் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பெண்கள் நின்ற பகுதிக்கு சென்ற ஒருவர் திடீரென ஒரு பெண்ணிடம் இருந்து 'பிக்பாக்கெட்' அடிக்க முயன்றுள்ளார். அப்போது அதனை கண்டு சுதாரித்து கொண்ட பெண்கள் கையும் களவுமாக திருட முயன்ற நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீசார் அவரை கைது செய்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் பர்சை, முதியவர் ஒருவர் திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது
    • கையெடுத்து மன்னிப்பு கேட்டு தப்பி சென்றார்

    திருச்சி, 

    திருச்சியில் எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலையை திறப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூ கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார் மூலம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அளிக்க வந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை முதியவர் ஒருவர் திருடினார்.இதை அருகில் இருந்து பார்த்தவர்கள் அவரை பிடித்தனர் உடனடியாக அவர் மறைத்து வைத்திருந்த பர்சை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த நிர்வாகிகளை கையெடுத்து கும்பிட்டு என்னை மன்னித்து விடுங்கள் என கூறியபடி அங்கிருந்து தப்பிச் சென்றார். முன்னாள் முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் பரிசை திருடிய சம்பவம் சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • திருவானைக்காவலில் துணிகரம்
    • ஸ்ரீரங்கம் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை

    திருச்சி,

    பெரம்பலூர் மாவட்டம் சொக்கநத்தம் அயனாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சூரிய பிரகாசம் (வயது 28). இவர் திருவானைக்காவல் அழகிரிபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கிய போது இரண்டு மர்ம நபர்கள் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர். இதுகுறித்து அவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீசார் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்களா?
    • வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள் ளது. இந்த பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும்.

    பள்ளி செல்லும் மாண வர்களும் வீட்டுக்கு செல்வ தற்காக அதிக அளவு வருவ தால் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் ஏறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறி வருகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    நேற்று மாலை பயணி ஒருவர் பஸ்சில் ஏறும்போது அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக் கெட் திருடர்கள் நைசாக எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். மேலும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் பாது காப்பிற்கு போலீசார் நிய மனம் செய்யப்பட்டுள்ள னர். கூடுதலாக போலீசாரை நியமித்து பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்கும் வகையில் அண்ணா நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலை யத்தில் சி.சி.டி.வி. கேம ராக்களை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டால் ஓரளவு பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்ப வங்களை தடுக்க முடியும். குடிமகன்கள் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகமாக உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பஸ் நிலையத்தில் மோதி கொண்டும் வருகிறார்கள். இதை மனதில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    ×