search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருமகள் கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • அஜ்மிரி பேகம் சமையலறைக்கு சென்று சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அத்தாபூரை சேர்ந்தவர் பர்சானா. இவரது மருமகள் அஜ்மிரி பேகம் (வயது 28).

    மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை பர்சானா தனது மருமகளிடம் டீ போட்டு தரும்படி கேட்டார். அதற்கு அவரது மருமகள் டீ போட்டு தர முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அஜ்மிரி பேகம் சமையலறைக்கு சென்று சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    தன்னுடன் அடிக்கடி சண்டையிடுவதால் ஆத்திரத்தில் இருந்த பர்சானா சமையலறைக்கு சென்று துப்பட்டாவால் மருமகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    இது குறித்து தகவலறிந்த அத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜ்மிரி பேகத்தின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்சானாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். டீ போட்டுக்கொடுக்க மறுத்த மருமகளை மாமியார் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது.
    • போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கவுசாம்பி:

    உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் (வயது 33) என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் அவரது மாமியார், மருமகளிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், தனது மருமகளின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிவிட்டதாக தெரிகிறது. உடனே இதுகுறித்து சாலி பேகம் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சாலி பேகம், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×