search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு"

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
    • இதில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக ஆர்சிபி அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் இதுவரை இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளனர். இதில் ஒரு முறை ஆர்சிபியும் 7 முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளது.

    • பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆர்சிபி வெற்றி பெற்றதை பார்த்தோம்.
    • அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் கவுரவிக்கப்பட்டனர். மந்தனா கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்த போது இரு புறமும் பெங்களூரு அணி வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

    இதில் ஆண்கள் ஆர்சிபி அணிகள் பங்கேற்று அவர்களை கவுரவித்தனர். பின்னர் வீராங்கனைகள் மைதானத்தில் கோப்பையுடன் உற்சாகமாக வலம் வந்தனர். அப்போது ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:-

    பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதை பார்த்தோம். அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன். அதை செய்தால் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஐ.பி.எல். கோப்பையை வென்று, அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவு.

    இங்குள்ள அந்த அணி (பெங்களூரு) முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். மேலும் அவர் கிங் என்று கூற வேண்டாம். விராட் என்றே கூறுங்கள்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை அதனை மாற்றியுள்ளது.
    • ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    பெங்களூரு:

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 மாற்றங்களை கொண்டுள்ளது. கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என்ற பெயரில் விளையாடவுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் பெயரை மாற்றி இருக்கிறது.

    இதனை தொடர்ந்து ஜெர்சியின் வண்ணத்தையும் மாற்றியுள்ளது. ரெட் மற்றும் கருப்பு கலரில் இருந்த ஜெர்சியை தற்போது நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது. கடைசியா ஆர்சிபி அணியின் லோகோவை மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரிசிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    • ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
    • அந்த வகையில் ரோகித் மற்றும் கோலி அவரவர் அணியுடன் இணைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதே போல இந்திய அணியின் கேப்டன் ரோகித், மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இவருக்கு இசையுடன் ஒரு வீடியோவை மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
    • டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

    இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

    • இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம்.
    • வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று மந்தனா கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணிக்கு 114 ரன் இலக்காக இருந்தது.

    ஷபாலி வர்மா அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன் எடுத்தார். ஸ்ரேயங்கா பட் டேல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    எலிஸ்பெரி 35 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும், சோபி டேவின் 32 ரன்னும் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் கிடைத்தன.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    ஐ.பி.எஸ். போட்டியில் விராட் கோலியை கொண்ட ஆர்.சி.பி. அணி இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 16 ஆண்டுகளில் 3 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    ஆனால் பெண்கள் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

    கோப்பையை வென்றதால் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய பாடம் கற்றோம்.

    அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 'ஈ சாலா கப் நம்தே' என சொல்வது உண்டு. இப்போது கோப்பை நமது வசம் (ஈ சாலா கப் நம்து)

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    • சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆடவில்லை.
    • தற்போது விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. கோலி-அனுஷ்கா தம்பதிக்கு லண்டனில் 2-வது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் அவர் ஆடவில்லை. 2-வது குழந்தை பிறந்ததால் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது தெரிய வந்தது. இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் ஆடுவாரா என சந்தேகம் எழுந்தது.

    இந்நிலையில், விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். 2-வது குழந்தை பிறந்த பிறகு அவர் முதல் முறையாக தோன்றினார்.

    விராட் கோலி நாடு திரும்பியுள்ள நிலையில், ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். வரும் 19-ந்தேதி அவர் பெங்களூரு வந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இணைந்து கொள்கிறார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    • பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது.
    • ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இப்போதே தட்டுப்பாடு சூழல் உருவாக துவங்கியது.

    சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது.

    எனினும், முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் வலைதளம் அதிக பயனர்கள் டிக்கெட் எடுக்க முயற்சித்த காரணத்தால் முடங்கியது. இதன் காரணமாக ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    ஆர்.சி.பி. அணி பெங்களூருவில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 2 ஆயிரத்து 300-இல் இருந்து துவங்குகிறது. டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை ரூ. 42 ஆயிரத்து 350 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட் விற்பனை துவங்கியதுமே, அதனை வாங்க சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் 17 நாட்களுக்கான போட்டிகளின் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி துவங்கியது. ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    லீக் பிரிவின் கடைசி போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

     


    இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மார்ச் 17-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். 

    • வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் 11.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூரு.
    • பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    • மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர்.
    • 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அனுஜ் ராவத் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் கேப்டன் டூ பிளெசிஸ்-கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 120 ரன்கள் சேர்த்தனர்.

    இதேபோல் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது.

    மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×