search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் மயானம்"

    • இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கறம்பக்குடி பேரூராட்சியில் ரூ.1.88 கோடியில் மின் மயானம்
    • பேரூராட்சி தலைவர் பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள் ளன. கறம்பக்குடியில் மின் மயானம் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று நகர்புற அமைச்சர் ஒப்புதலோடு மின் மயானம் அமைக்க அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கறம்பக்குடி பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி 5-வது வார்டு பகுதியில் தட்டபூரணி செல்லும் சாலையில் ஏற்கனவே உள்ள மயானம் அருகே மின்மயானம் அமைப்பத ற்கான பணியை பூமி பூஜை யுடன் கறம்பக்குடி பேரூரா ட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கரு ப்பையா, முருகேஸ்வரி, செண்பகவல்லி, வளர்மதி, ஜன்னத் பேகம், பரக்கத் நிஷா, ராஜா, மஞ்சுளா தேவி, பரிதாபகம், ராஜ சேகர், ரங்கசாமி மங்கை யர்கரசி மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சக்திவேல் அலுவலர்கள் பணியாளர்கள் அப்துல் லத்தீப், அப்துல் அலீம், சாதிக் பாஷா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது.
    • மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அருகே பழமையான மயானம் ஒன்று உள்ளது. தொடக்கத்தில் இந்த இடம் வயல்வெளிகளுக்கு இடையே இருந்தது. நாடா வட்டத்தில் இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது. இந்த மயானத்தால் சிறு சிறு சங்கடங்கள் இருந்து வந்தாலும் அதனைப் பொதுமக்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற பேரூராட்சி முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த மின் மயானத்தை வேறு மயானத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் கலெக்டர் உள்ளிட்டோ ருக்கு மனுவும் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதே இடத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதனைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இங்கு மின் மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

    மேலும் இந்த திட்டம் இந்த பகுதியில் கைவிடப்பட வில்லை என்றால் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செக்கானூரணி பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க கோரி உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ. கொக்குளம், தேங்கல்பட்டி, செக்கானூரணி கிராம பகுதிகளுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரும் செக்கானூரணியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆ. கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தேங்கல்பட்டி கிராமம், செக்கானூரணி கிராம மக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மயானத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் சாஸ்திரங்கள், சம்பிர தாயங்கள், முறைப்படி காரியங்கள் செய்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பகுதியில் பாரம்பரிய மயானத்தை மாற்றி மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாரம்பாரிய மான மயானத்தை மாற்றினால் தங்களின் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாய முறை பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

    எனவே மின் மயானம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு செக்கானூரணியில் பாரம்பரிய மயானம் தொடர்ந்து நடைபெற நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செக்கானூரணியில் அமைக்க திட்டமிட்டிருந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×