search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சாலைகள்"

    • ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சி கு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 31.42 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெறு வதையும், அதன் அருகே அப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    வடலூர் நகராட்சி பகுதியில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதையும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நைனார்குப்பம் - வடலூர் சபை சாலை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தையும், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டு மான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் முதுநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயா ளிகள் பிரிவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றி யங்க ளுக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பல சாலைகள் சீரமைத்து பல வருடங்கள் ஆகிய தாலும், புயல் மற்றும் பெரு கனமழை யினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

    எனவே கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து நான் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது கீழ்காணும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×