என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபான பார்"
- 4 பேரும் மதுரை அய்யர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பிற்கு சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர்.
மதுரை:
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் தோபாராவை சேர்ந்தவர் விஜயந்தர் சிங் மகன் தர்மேந்திர் சிங் (வயது 32). இவர் தஞ்சாவூரில் ஜி.எஸ்.டி. அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டம் குருவாடாவை சேர்ந்த பரத் சிங் மகன் ராகுல் யாதவ் (32). இவர் தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜி ஜுன்ஸ் ஜினுவைச் சேர்ந்தவர் ராமச்சந்திர தேசுசாய் மகன் சுபேஷின் (29). இவர் முத்துப்பேட்டையில் கஸ்டம்ஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். ஹரியானா மாநிலம் குரு கிராம் மாவட்டம் நூர்கரத் துவை சேர்ந்தவர் யாராம் ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24). இவர் மதுரையில் சி.பி.ஐ. கிரைம் பிராஞ்ச் உதவி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 4 பேரும் மதுரை அய்யர் பங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கிளப்பிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது அவர்களுக்கான பில் தொகையை கிளப் ஊழியர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர்கள் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த கிளப்பின் மேனேஜர், உச்சபரம்பு மேடு அய்யர் பங்களா ஹரிஹரன் தெருவை சேர்ந்த ஆனந்த் பாபு (38) என்பவர் அங்கு சென்றுள்ளார்.
அவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 அதிகாரிகளும் கிளப் மேலாளர் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி பாட்டில்களை உடைத்து அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிளப் மேனேஜர் ஆனந்த் பாபு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது.
- தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
- மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.
தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.
கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்