என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதை ஆக்கிரமிப்பு"
- அதிகாரிகள் ஆய்வு
- பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில், ஊராட்சி மூலம் போடப்பட்ட கிராம சாலையை அப்பகுதி பொது மக்கள் சுமார் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இடத்தின் உரிமையாளர் திடீரென டிராக்டர் மூலம் சாலையில் ஏர் ஓட்டினார். இதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம் பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் -கலெக்டர் பானுமதி தலைமையில், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் இந்த பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனிநபர் வேலி அமைத்துள்ளார்.
- திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட வைரவர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது.
இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட தலைக்கட்டு குடிமக்கள் இருந்து வரும் நிலையில் இடையப்பட்டி, புல்வாய்க்கரை, நேர்த்தியா யிருப்பு பகுதி யிலுள்ள குடிமக்கள் மட்டுமல்லாது பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆண்டு தோறும் வைரவர் கோவில் வைகாசிக்களரி திருவிழா விற்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஆறுமுகம் என்பவர் கோவிலுக்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வந்து கடும் சிரமத்திற்கிடையே வைரவர் கோவிலில் வழிபாடு நடத்தி வருவதாக குடிப்பொதுமக்கள் வேதனை தெரிவித்துள் ளனர்.
மேலும் தற்போது கம்பி வேலி அமைத்திருக்கும் பகுதிக்குள் நீர்வரத்து கால்வாய்,ஊரணி மற்றும் கலுங்கு அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இவ்வாறு கம்பிவேலி அமைத்ததோடு அப்பகுதியில் தோட்டம் அமைக்க வேண்டி இடையூறாக இருந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட பனை மரங்களையும் வேரோடு வெட்டி சாய்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வரும் ஆறுமுகம் அங்கு கன்றுகள் நட்டு பெரிய தோட்டம் அமைப்பதற்கான பணி களை விரைவாக மேற்கொண்டு வருவதாக வும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனிநபர் ஒருவர் கோவில் செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கொண்டு வழி விடாமல் மறுத்து வருவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகாரளித்தனர். இதனையடுத்து திருச்சுழி தாசில்தார், கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் ஆறுமுகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் ஆறுமுகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.ஆகவே வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் பொதுப்பாதையை வழிமறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை உடனடியாக அகற்றுவதுடன் தடையின்றி கோவிலுக்கு சென்று வரும் வகையில் நிரந்தர பாதையை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடையப்பட்டி பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது மக்கள் அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்