என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் எம்பி"
- கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train. Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024
- அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
- கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
கால்பந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல்.
- அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
- நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.
நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
- காங்கிரஸ் எம்.பி டி.கே சுரேஷ் இல்லம் முன் சாலையில் பாஜகவினர் இன்று ஏராளமானோர் திரண்டனர்.
- போலீசார் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.பி. டி.கே சுரேஷின் "தனி நாடு" என்ற கருத்தைக் கண்டித்து அவரது இல்லத்திற்கு முன்பாக பாஜக யுவமோர்ச்சா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே, 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜே', 'டவுன் டி.கே. சுரேஷ்' போன்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
நிதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள அநீதியை மத்திய அரசு சரி செய்யாவிட்டால், தென் மாநிலங்கள் 'தனிநாடு' கோரும் நிலைக்குத் தள்ளப்படும் என்று சமீபத்தில் அவர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி டி.கே சுரேஷ் இல்லம் முன் சாலையில் பாஜகவினர் இன்று ஏராளமானோர் திரண்டனர்.
அவரது இல்லம் முன் உள்ள சாலையில் அமர்ந்து பாஜக வினர் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜே', 'டவுன் டி.கே. சுரேஷ்' என முழக்கங்கள் எழுப்பினர். அதைதொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு முன் பாஜக யுவமோர்ச்சா தொண்டர்கள் நடத்திய போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கூறுகையில், "ஜனநாயகத்தில் போராட்டம் நடத்தவும் பேசவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.
அவர்களை யாராலும் தடுக்க முடியாது. எனது அறிக்கையை பாஜக திரித்து வருகிறது. நாடு பிளவுபட வேண்டும் என்று நான் அவ்வாறு ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கட்டும்.
கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். எனது அறிக்கை தெளிவாக உள்ளது. பாஜக தலைவர்கள் எனது அறிக்கையை திரிக்க முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு நான முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை" என்றார்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
- எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும்.
இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது."
"வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும்," என்று தெரிவித்தார்.
- ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தகவல்.
- ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை" என்றார்.
இதுகுறித்து, "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என விளக்கம் அளித்துள்ளார்.
- சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
- கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது.
சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. காங்கிரஸ் முன்னாள் மேல் சபை எம்.பி. விஜய் தர்தாவை குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் தீர்ப்பு வழங்கினார்.
முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உள்பட மொத்தம் 7 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தர்தாவின் மகன் தேவேந்திர தர்தா, 2 சீனியர் அரசு ஊழியர்களான சிரோபா, சம்ரியா, தனியார் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டை விவரம் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்