search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை 2023"

    • ஐசிசி-யின் இரண்டு இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
    • இவரது தலைமையில் இந்திய சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி தோல்வி அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    ராகுல் டிராவிட் இரண்டு ஐசிசி-யின் இறுதிப் போட்டியிலும், ஒரு அரையிறுதி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார். எதிர்கால பயிற்சியாளர் பதவி குறித்தும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிவற்றில் ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பீர்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் "என்னுடைய பதவியின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போதுதான் இந்த போட்டியில் இருந்து வெளியே வந்துள்ளேன். அது குறித்து யோசிக்க நேரம் இல்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அது குறித்து யோசிப்பேன். இந்த நேரம் வரை, இந்த தொடரில்தான் முழுக் கவனம் செலுத்தினேன். இதைத்தவிர என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எதையும் நினைக்கவில்லை" என்றார்.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    • தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

    குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். தொடக்க வீரரான இவர் 120 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சருடன் 137 ரன்கள் குறித்து ஆட்டமிழந்தார்.

    இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியிடம் இருந்து உலகக் கோப்பையை பறித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.

    இது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியிலும் சதம் விளாசியதுடன், ஆட்ட நாயகன் விருது வெற்று இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தார்.

    இதன்மூலம் ஒரே வருடத்தில் இரண்டு ஐசிசி டிராபிகளை இந்தியாவிடம் இருந்து பறித்துக் கொண்டார் டிராவிஸ் ஹெட்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் 530 ரன்கள் அடித்துள்ளார்.
    • அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள். 530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "Iyer" ஹேஷ்டேக் டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    • 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வி.
    • சொந்த மண்ணில் தோல்வியடைந்ததால், இந்திய வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணி வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர். சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் கண்ணீர் விட்டனர்.

    இந்திய பிரதமர் மோடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வழங்கினார். பின்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "உலகக் கோப்பை முழுவதும் உங்களுடைய திறமை மற்றும் உறுதி குறிப்பிடத்தகுந்தது. நீங்கள் சிறந்த ஸ்பிரிட் உடன் விளையாடி நாட்டிற்கு மகத்தான பெருமை சேர்த்தீர்கள். நாங்கள் இன்று, எப்போதும் உங்களோடு நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடியை பிரித்தது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.
    • இருவரும் அரைசதம் அடித்த உடனே விரைவாக ஆட்டம் இழந்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    கடைசியில் எங்களது சிறந்ததை கைப்பற்றியுள்ளோம். முக்கியமான போட்டிகளில் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து, சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார்கள். இந்த தொடர் முழுவதும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டோம். இன்று நாங்கள், சேஸிங் செய்வது சிறந்ததாக இருக்கும் என நினைத்தோம். இது எங்களுக்கு சற்று எளிதாக இருக்கும் என நினைத்தோம். எல்லோரும் இதில் ஆர்வமாக இருந்தனர்.

    நான் நினைத்ததை விட ஆடுகளம் கூடுதல் ஸ்லோ ஆக இருந்தது. குறிப்பாக பந்து சுழலவில்லை. அதற்கு ஏற்றவாறு தங்களை சரிசெய்து கொண்டு, பந்து வீச்சாளர்கள் சரியான லைனில் பந்தை பிட்ச் செய்தார்கள்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாங்கள் பீல்டிங்கில் சொதப்பினோம். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் வயதான வீரர்களை பெற்றுள்ளோம். இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தங்களை பணியை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டனர்.

    300 ரன்களுக்கு கீழ் என்பது 240-ஆக அமைந்தது. 300 ரன்கள் கடினமாக இருக்கும் என நினைத்தேன். இருந்தாலும், இந்த ஆடுகளம் அதையும் சேஸிங் செய்யக்கூடிய அளவில்தான் இருந்தது. 240-ல் இந்தியாவை கட்டுப்படுத்திய மிகவும் மகிழ்ச்சி. லபுஷேன் பொறுமையாக விளையாடினார். டிராவிஸ் ஹெட் அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    தைரியமாக ஆட்டத்தை எடுத்துச் சென்று, பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து, மிகப்பெரிய போட்டியில் தனது கேரக்டரை வெளிப்படுத்தினார். அவர் காயம் அடைந்தபோது, தேர்வாளர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வெற்றி நீண்ட நாட்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். இந்த சீசனில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளோம். அதில் இது மிகவும் உயர்ந்தது. மலையின் உச்சிப்பகுதி.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    • 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.
    • டிராவிஸ் ஹெட்- லபுஷேன் ஜோடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பி விட்டார்கள்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ரோகித் சர்மா கூறியதாவது:-

    முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும். விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

    240 ரன்கள்தான் அடித்திருக்கும்போது, விக்கெட்டை வீழ்த்தி விரும்ப வேண்டும். ஆனால் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக அவர்களுக்குரியதாக்கி விட்டனர்.

    சேஸிங் செய்தபோது, ஆடுகள் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிக ரன்கள் அடிக்கவில்லை. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினோம். இன்னும் வீழ்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த இருவரும் சிறப்பாக விளையாடினர்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • மூன்று சதங்கள் விளாசி சச்சின் ஒருநாள் சாதனையை முறியடித்தார்.
    • தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக கோப்பையை வென்றது.

    இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள் அடித்ததை முறியடித்தார்.

    இன்றைய போட்டியில் 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒரே தொடரில் 765 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

    • இந்தியா முதலில் 240 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது.

    போட்டி முடிந்த பிறகு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இரு அணி வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

    பின்னர் இந்தியா பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஆகியோர் இணைந்து பேட் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கினர். பின்னர், ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    • முதல் 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமான அமைந்தது.
    • 2-வது பேட்டிங் செய்ய எளிதாக அமைந்ததால், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    போட்டி தொடங்குவதற்கு முன், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அப்போது, கம்மின்ஸ் தவறான முடிவை எடுத்துவிட்டார். இந்தியா அதிக ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை சுருட்டிவிடும் என விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோசத்தில் இருந்தனர். ஆனால், முதல் பேட்டிங்கின்போது 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 240 ரன்களே அடிக்க முடிந்தது.

    2-வது பேட்டிங்கின்போது, ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. சற்று பனித்துளி இருந்ததால் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. மேலும், பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.

    இதன் காரணமாக கம்மின்ஸ் ஆடுகளத்தை நன்றாக கணித்து, முதலில் பீல்டிங் தேர்வு செய்து, கோப்பையையும் தட்டிப்பறித்துவிட்டார்.

    • உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கும் நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர். போட்டியின் போது சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டி நடுவர்கள் யார் யார் என்ற விவரங்கள் என போட்டி குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், போட்டியின் வர்ணனையாளர்கள் குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் போட்டியின் போது ஆங்கில மொழியில் வர்ணனையில் ஈடுபடுவர். இதில், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு பிரபலங்கள் இடம்பெற்று உள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு காஸ் நாயுடு, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹூசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மாத்யூ ஹேடன், இயன் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் வர்ணனை செய்யவுள்ளனர். 

    • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
    • இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 11-ம் தேதி உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் துவங்கின. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடின. அதன்படி புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.

    அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

    அந்த வகையில், நாளைய போட்டியில் டாஸ் போட்டதும் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மதியம் 1.35-க்கு துவங்கும் சாகச நிகழ்ச்சி 1.50 மணி வரை நடைபெற இருக்கிறது. பிறகு, போட்டியின் முதல் இன்னிங்ஸ் தேநீர் இடைவேளையின் போது ஆதித்யா காத்வியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

    பின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது ப்ரிதம் சக்ரபோர்த்தி, ஜோனிதா காந்தி, நாகாஷ் அசிஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங் மற்றும் துஷர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிறகு 2-வது இன்னிங்ஸ்-இன் தேநீர் இடைவேளையின் போது லேசர் மற்றும் லைட் ஷோ நடைபெறுகிறது.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.
    • மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    ×