என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொலை?"
- மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது.
- ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது. இதையடுத்து ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அது புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த வெள்ளத்துரை (வயது60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வாசுதேவநல்லூரில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவரை நேற்று முதல் காணவில்லை.
இந்த நிலையில் அவரது ஆட்டோவில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவரை யாரேனும் ஆட்டோவுடன் கடத்தி சென்று கொலை செய்து எரித்து இருக்க லாமா? அப்படியானால் அந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தா ர்கள்? என்பது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
- நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன்(45) என்பவர் கடந்த 5-ந்தேதி அதே பகுதியில் உள்ள அவரது மீன்கடை வாசலில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, கோவிலூர் பகுதியை சேர்ந்த மகேஷ் உள்பட 4 பேர் நொளம்பூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான மந்திரமூர்த்தியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க.பிரமுகர் ஜெகன் கொலை தொடர்பாக நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள கோரப்பட்டரை பகுதியியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் குணசேகரன் (வயது 23). இவர் தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இன்று காலை அவரது பெற்றோர் குணசேகரனை தேடி சென்றனர். அப்போது அவர் கோரப்பட்டரை பகுதி சாலை ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் குணசேகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் லத்தேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில், நேற்று இரவு குணசேகரன், சம்பவ இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்