search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு எண்ணும் மையம்"

    • 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
    • தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

    வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். மற்றும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்த வேண்டும்.

    துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

    • ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வாக்கு எண்ணுகை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும்.
    • எந்ததொரு மின்னணு கருவியையும் எண்ணுகை மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு ) ஸ்டாலின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவக்குமார், உதவி ஆணையர், நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு இளவரசி, தனித்துணை கலெக்டர், சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் (தேர்தல்),தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கோவை பாராளுமன்ற தொகுதிக்கு அரசினர் பொறியியல் கல்லூரியிலும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மேலும் வருகிற 4-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்காள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 7 மேஜைகளும், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணுவதற்கு தலா 14 மேஜைகள் வீதமும், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு 18 மேஜைகளும் என மொத்தம் 101 வாக்கு எண்ணிக்கை மேஜைகளும் அமைக்க எற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதியினை தவிர வேறுசட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் சென்று பார்வையிட முடியாது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் வாக்கு எண்ணுகை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையிலிருந்து வாக்கு எண்ணிக்கையினை பார்வையிடலாம்.

    வாக்குகள் எண்ணப்படுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எண்ணுகை இட முகவர்கள், அவர்களின் நியமன கடிதங்கள், ஆளரி அடையாள அட்டை,தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் கொண்டு வர வேண்டும். எண்ணுகை இட முகவர்கள் செல்போன், ஐ பேட், மடிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க அத்தகைய எந்ததொரு மின்னணு கருவியையும் எண்ணுகை மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    வாக்கு எண்ணிக்கை மையம் அறையினுள் வேட்பாளர்களின் முகவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
    • கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராணிமேரி கல்லூரியில் 172 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 கேமராக்களும், லயோலா கல்லூரியில் 188 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    • ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல்:

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி க்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1.1.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் என 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலு க்கான வாக்கு எண்ணிக்கை மையம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலை க்கழக கல்லூரியில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு செய்யும் எந்திரம் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை, முகவர்கள் அமரும் பகுதி, பத்திரிகையாளர்கள் பகுதி, கண்காணிப்பு கோபுரம் அமையும் இடம், வரவேற்பறை அமைவிட ங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×