search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2024"

    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

    இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.

    இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    நியூயார்க்:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை நாளை (9-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்து நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக நம்பிக்கையுடன் ஆடுவார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, ரிஷப் பண்டும், பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

    அயர்லாந்துக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். அவரது இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    விராட் கோலி தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அதே தொடக்க வரிசையில் விளையாடுவார்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது எதிர்பாராத ஒன்றாகும்.

    இந்தியாவிடமும் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மோசமாக அமைந்தது. மேலும் சூப்பர் ஓவரில் முகமது அமீர் பந்து வீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும்.

    வெற்றிக்காக இரு அணிகளும் கடைசி வரை முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    டல்லாஸ்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    • 2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார்.
    • ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்று வருகிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார். ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார்.

    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா என்ற வசனத்தை முன் வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர், அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதை இதன்மூலம் தான் தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

    இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை.
    • இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்று அயர்லாந்து அணி வீரர் ரோஸ் அடேர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளோம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்.

    அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்.

    என்று கூறினார்.

    • பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது.
    • இதற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் அசாம் கானை பார்த்து பாபர் அசாம் காண்டாமிருகம் என திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதனை பார்த்த ரசிகர்கள் பாபர் அசாமுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்டன் என்ற முறையில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்த கூடாது எனவுக் கூறி வருகின்றனர்.

    பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்த போட்டி வருகிற 6-ந் தேதி கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம், டல்லாஸ் என்ற மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    • என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட்.
    • நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன்.

    நியூயார்க்:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த முயற்சித்தேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய முதல் சர்வதேச போட்டியில் ராகுல் டிராவிட்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் என்பதும், பல ஆண்டுகளாக அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

    ஒரு அணியாக இதைதான் செய்ய வேண்டும் என என்னிடம் முதலில் கூறியது டிராவிட் தான். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் , இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

    • அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் மெண்டீஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 3 ஓவரில் வெறும் 13 ரன்களே எடுத்தது.

    தொடர்ந்து தடுமாறி வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் நிசங்கா 8 பந்தில் 3 ரன்களிலும், கமிண்டு மெண்டீஸ் 15 பந்தில் 11 ரன்களிலும், ஹசரங்கா 0, சதீரா 0, அசலங்கா 6, குசல் மெண்டீஸ் 19 (30) தசுன் சனங்கா 9, பதிரனா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிக பட்சமாக குசல் மெண்டீஸ் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டும் ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை.
    • நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அரையிறுதியில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.

    ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.

    அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது.
    • 2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.

    டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.

    2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-

    1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) - இலங்கை 174/6 (20 ஓவர்கள்) - இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 - 7/1 - கண்டி, 2012

    2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) - நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) - மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 - 17/0 - கண்டி, 2012

    3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024

    ×