search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து தொடர்"

    • ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட் ஆனார்.
    • சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த சர்ப்ராஸ் கான் 62 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா 99 ரன்னில் இருந்த போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்தார். பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற சர்ப்ராஸ்கான் பாதி தூரம் வந்து விட்டு திரும்புவதற்குள் மார்க்வுட்டால் பிரமாதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார். சர்ப்ராஸ்கான் 62 ரன்களில் (66 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

    இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சர்ப்ராஸ்கானுக்காக வருந்துகிறேன். இந்த ரன்-அவுட் எனது தவறான அழைப்பால் தான் நடந்தது. அவர் அருமையாக ஆடினார்' என்று கூறியுள்ளார். 'கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம் தான். அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல' என்று சர்ப்ராஸ் குறிப்பிட்டார்.

    • இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.
    • தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அறிமுக போட்டியில் களமிறங்கும் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

    இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார்.

    தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "சர்பராஸுக்காக நீங்கள் எவ்வளவு தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சர்பராஸின் தந்தையிடம் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    • இந்திய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகம்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    அந்த வரிசையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். 

    • இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
    • அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.

    சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.

    ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.

    கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

    நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    • முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன்.
    • எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:-

    ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் பீல்டிங் செய்யும்போது லீச்க்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    அவருக்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து அணி அழைக்கும் திட்டம் இல்லை.

    • மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
    • 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

    இந்நிலையில், கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.

    இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக கோலி விலகியதை ஏற்றுக்கொள்வதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
    • இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

    இதற்கிடையே, 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் ராஞ்சியில் 23-ம் தேதியும், கடைசி டெஸ்ட் மார்ச் 7-ம் தேதியும் தொடங்குகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டி ருந்தது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி இருந்தார்.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறவில்லை.

    காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடாத பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் இருவரும் போட்டியில் விளையாடுவது குறித்து மருத்துவ குழுவின் உடற்தகுதி அறிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ்.பரத், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
    • இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    முதல் 2 டெஸ்டிலும் உலகின் முன்னணி பேட்ஸ்மேனான விராட்கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காரணத்தை கூறவில்லை.

    விராட்கோலியின் மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே 3-வது மற்றும் 4-வது டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. கடைசி டெஸ்டிலும் ஆடுவதில் உறுதியில்லை. ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாத நிலை இருப்பதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்டுகளில் விராட்கோலி விளையாடமாட்டாரா? என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே இருக்கிறது. ஆனால் அவர் அடுத்து வர உள்ள போட்டிகளில் விளையாட போவதில்லை என்று பேசப்படுகிறது. அவர் எஞ்சிய 2 டெஸ்டில் ஆட போவதில்லையா அல்லது 3 போட்டிகளும் விளையாடவில்லையா போன்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

    எஞ்சிய டெஸ்டுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. அணியில் வீராட்கோலி இடம் பெறவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப் பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் இழப்பாக அமையும்.

    மேலும் விராட்கோலி ஆடாமல் போனால் உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

    விராட்கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 15 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அவரது முன்னுரிமையை நான் மதிக்கிறேன்.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பரபரப்பானதாக அமைய போகிறது. முதல் 2 போட்டிகள் சிறப்பானதாக இருந்தது.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை.
    • முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

    முதலில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளில் யார் யார் விளையாடுவார்கள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. முக்கியமாக விராட் கோலி விளையாடுவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது. அதில், இந்திய அணிக்கு எப்போது திரும்ப வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கோலி இன்னும் எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் எப்போது முடிவு செய்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் இருக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கிரிக்கெட் போட்டிகளில் கோலி இருந்தால், அந்த போட்டியை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். அவர் கொடுக்கும் ரியாக்ஷன், பீல்டிங், ஆட்டம், என சொல்லி கொண்டே போகலாம். அவர் இல்லாதாது அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம்.

    கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் விளையாட வரமாட்டார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×