search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
    • 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.

    நேற்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

    58 தொகுதிகளில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக விவரங்கள் :

    பீகார் - 52.2 சதவீதம்

    டெல்லி - 57.67 சதவீதம்

    அரியானா - 60.4 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர் - 54.3 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 63.76 சதவீதம்

    ஒடிசா - 69.56 சதவீதம்

    உத்தர பிரதேசம் - 54.03 சதவீதம்

    மேற்கு வங்கம் - 79.47 சதவீதம்

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக பீகார் - 52.24 சதவீதம், டெல்லி - 53.73 சதவீதம், அரியானா - 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் - 61.41 சதவீதம், ஒடிசா - 59.60 சதவீதம், உத்தர பிரதேசம் - 52.02 சதவீதம், மேற்கு வங்கம் - 77.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, 6ம் கட்ட தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.

    • தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது.
    • வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தின் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது

    தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

    இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது

    வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. அரக்கோணம்

    மொத்த வாக்குகள் - 1562871

    பதிவான வாக்குகள் -1159441

    வாக்குப்பதிவு சதவீதம் - 74.19

    2. ஆரணி

    மொத்த வாக்குகள் - 1496118

    பதிவான வாக்குகள் -1133520

    வாக்குப்பதிவு சதவீதம் - 75.76

    3. சென்னை சென்ட்ரல்

    மொத்த வாக்குகள் - 1350161

    பதிவான வாக்குகள் -728614

    வாக்குப்பதிவு சதவீதம் - 53.96

    4. சென்னை வடக்கு

    மொத்த வாக்குகள் - 1496224

    பதிவான வாக்குகள் - 899367

    வாக்குப்பதிவு சதவீதம் - 60.11

    5. சென்னை தெற்கு

    மொத்த வாக்குகள் - 2023133

    பதிவான வாக்குகள் - 1096026

    வாக்குப்பதிவு சதவீதம் - 54.17

    6. சிதம்பரம்

    மொத்த வாக்குகள் - 1519847

    பதிவான வாக்குகள் - 1160762

    வாக்குப்பதிவு சதவீதம் - 76.37

    7. கோயம்புத்தூர்

    மொத்த வாக்குகள் - 2106124

    பதிவான வாக்குகள் - 1366597

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.89

    8. கடலூர்

    மொத்த வாக்குகள் - 1412746

    பதிவான வாக்குகள் - 1025298

    வாக்குப்பதிவு சதவீதம் - 72.57

    9. தருமபுரி

    மொத்த வாக்குகள் - 1524896

    பதிவான வாக்குகள் - 1238184

    வாக்குப்பதிவு சதவீதம் - 81.20

    10. திண்டுக்கல்

    மொத்த வாக்குகள் - 1607051

    பதிவான வாக்குகள் - 1143196

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.14

    11. ஈரோடு

    மொத்த வாக்குகள் - 1538778

    பதிவான வாக்குகள் - 1086287

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.59

    12. கள்ளக்குறிச்சி

    மொத்த வாக்குகள் - 1568681

    பதிவான வாக்குகள் - 1242597

    வாக்குப்பதிவு சதவீதம் - 79.21

    13. காஞ்சிபுரம்

    மொத்த வாக்குகள் - 1748866

    பதிவான வாக்குகள் - 1253582

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.68

    14. கன்னியாகுமரி

    மொத்த வாக்குகள் - 1557915

    பதிவான வாக்குகள் - 1019532

    வாக்குப்பதிவு சதவீதம் - 65.44

    15. கரூர்

    மொத்த வாக்குகள் - 1429790

    பதிவான வாக்குகள் - 1125241

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.70

    16. கிருஷ்ணகிரி

    மொத்த வாக்குகள் - 1623179

    பதிவான வாக்குகள் - 1160498

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.50

    17. மதுரை

    மொத்த வாக்குகள் - 1582271

    பதிவான வாக்குகள் - 981650

    வாக்குப்பதிவு சதவீதம் - 62.04

    18. மயிலாடுதுறை

    மொத்த வாக்குகள் - 1545568

    பதிவான வாக்குகள் - 1083243

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.09

    19. நாகப்பட்டினம்

    மொத்த வாக்குகள் - 1345120

    பதிவான வாக்குகள் - 967694

    வாக்குப்பதிவு சதவீதம் - 71.94

    20. நாமக்கல்

    மொத்த வாக்குகள் - 1452562

    பதிவான வாக்குகள் - 1136069

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.21

    21. நீலகிரி

    மொத்த வாக்குகள் - 1428387

    பதிவான வாக்குகள் - 1013410

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.95

    22. பெரம்பலூர்

    மொத்த வாக்குகள் - 1446352

    பதிவான வாக்குகள் - 1119881

    வாக்குப்பதிவு சதவீதம் - 77.43

    23. பொள்ளாச்சி

    மொத்த வாக்குகள் - 1597467

    பதிவான வாக்குகள் - 1124743

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.41

    24. ராமநாதபுரம்

    மொத்த வாக்குகள் - 1617688

    பதிவான வாக்குகள் - 1103036

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.19

    25. சேலம்

    மொத்த வாக்குகள் - 1658681

    பதிவான வாக்குகள் - 1296481

    வாக்குப்பதிவு சதவீதம் - 78.16

    26. சிவகங்கை

    மொத்த வாக்குகள் - 1633857

    பதிவான வாக்குகள் - 1049887

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.26

    27. ஸ்ரீபெரும்புதூர்

    மொத்த வாக்குகள் - 2382119

    பதிவான வாக்குகள் - 1435243

    வாக்குப்பதிவு சதவீதம் - 60.25

    28. தென்காசி

    மொத்த வாக்குகள் - 1525439

    பதிவான வாக்குகள் - 1031961

    வாக்குப்பதிவு சதவீதம் - 67.65

    29. தஞ்சாவூர்

    மொத்த வாக்குகள் - 1501226

    பதிவான வாக்குகள் - 1024949

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.27

    30. தேனி

    மொத்த வாக்குகள் - 1622949

    பதிவான வாக்குகள் - 1133513

    வாக்குப்பதிவு சதவீதம் - 69.84

    31. தூத்துக்குடி

    மொத்த வாக்குகள் - 1458430

    பதிவான வாக்குகள் - 975468

    வாக்குப்பதிவு சதவீதம் - 66.88

    32. திருச்சிராப்பள்ளி

    மொத்த வாக்குகள் - 1553985

    பதிவான வாக்குகள் - 1049093

    வாக்குப்பதிவு சதவீதம் - 67.51

    33. திருநெல்வேலி

    மொத்த வாக்குகள் - 1654503

    பதிவான வாக்குகள் - 1060461

    வாக்குப்பதிவு சதவீதம் - 64.10

    34. திருப்பூர்

    மொத்த வாக்குகள் - 1608521

    பதிவான வாக்குகள் - 1135998

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.62

    35. திருவள்ளூர்

    மொத்த வாக்குகள் - 2085991

    பதிவான வாக்குகள் - 1430738

    வாக்குப்பதிவு சதவீதம் - 68.59

    36. திருவண்ணாமலை

    மொத்த வாக்குகள் - 1533099

    பதிவான வாக்குகள் - 1138102

    வாக்குப்பதிவு சதவீதம் - 74.24

    37. வேலூர்

    மொத்த வாக்குகள் - 1528273

    பதிவான வாக்குகள் - 1123715

    வாக்குப்பதிவு சதவீதம் - 73.53

    38. விழுப்புரம்

    மொத்த வாக்குகள் - 1503115

    பதிவான வாக்குகள் - 1150164

    வாக்குப்பதிவு சதவீதம் - 76.52

    39. விருதுநகர்

    மொத்த வாக்குகள் - 1501942

    பதிவான வாக்குகள் - 1054634

    வாக்குப்பதிவு சதவீதம் - 70.22

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக பீகார் - 45.21 சதவீதம், டெல்லி - 44.58 சதவீதம், அரியானா - 46.26 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 44.41 சதவீதம், ஜார்க்கண்ட் - 54.34 சதவீதம், ஒடிசா - 48.44 சதவீதம், உத்தர பிரதேசம் - 43.95 சதவீதம், மேற்கு வங்கம் - 70.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், 58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குப்பதிவு.

    மாநிலம் வாரியாக பீகார் - 36.48 சதவீதம், டெல்லி - 34.37 சதவீதம், அரியானா - 36.48 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 35.22 சதவீதம், ஜார்க்கண்ட் - 42.54 சதவீதம், ஒடிசா - 35.69 சதவீதம், உத்தர பிரதேசம் - 37.23 சதவீதம், மேற்கு வங்கம் - 54.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    • பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது- திரிணாமுல் காங்கிரஸ்
    • வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலின் 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா உள்ளிட்ட 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணிக்கு தொடங்கியது. பங்குராவில் தொகுதியில் உள்ள ரகுநாத்பூரில் ஐந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக எழுதப்பட்ட டேக் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் "பா.ஜனதா வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வாக்குகளை சூறையாட முயற்சி செய்கிறது என்பதை தொடர்ந்து மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இன்று ஐந்து வாக்கு இயந்திரத்தில் பா.ஜனதா டேக் தொங்கவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளத.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் "வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பூத் ஏஜென்ட்கள் கையெழுத்திட்ட பொதுவான டேக் தொங்கவிடப்படும். வாக்கு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும்போது ஆய்வு மேற்கொண்டு ஏற்பாடு செய்யும்போது ஹாலில் பா.ஜனதா வேட்பாளருடைய பிரதிநிதிகள்தான அங்கு இருந்தார்கள். இதனால் அவர்களுடைய கையெழுத்து மட்டும் வாங்கப்பட்டது.

    எனினும், 56,58,60,61,62 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படும்போது அனைத்து ஏஜென்ட்களும் இருந்தனர். அவர்களுடைய கையெழுத்துகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளின் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம்.
    • மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

    மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். இதேபோல் தலைமை தேர்தல் அதிகாரிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருடைய பெயர் இடம் பிடித்துள்ள வாக்குச்சாவடியில் இவர்தான் முதல் ஆண் வாக்காளராக வாக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வாக்களித்த பின் ஜெய்சங்கர் கூறியதாவது:-

    இந்த பூத்தில் நான் முதல் ஆண் வாக்காளராக வாக்களித்துள்ளேன். இதனால் வாக்களித்ததற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விரும்புகிறோம். மக்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    • டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரில் இன்று இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் அவரது கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். பாதுகாப்பு படையினர் தங்களது கட்சி ஏஜெண்டுகளை பணியாற்ற விடாமல் தடுப்பதாக கூறி மெகபூபா மறியலை மேற்கொண்டார். அவரை பாதுகாப்பு படையினர் சமரசம் செய்தனர். இதனால் அனந்த்நாக் தொகுதியில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு சற்று தாமதம் ஆனது.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறிகையில் "எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் பூத் ஏஜென்ட்களை அடைத்து வைத்துள்ளனர்.

    சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த விசயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்கள். வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது" என்றார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நேற்று மெகபூபா முப்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்- மோடி
    • ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள்- கார்கே

    டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தியில் "வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது. உங்களுடைய வாக்குகளையும் முக்கியமானதாக்குக. தேர்தல் நடைமுறையில் உற்சாகமாக மக்கள் பங்கேற்கும்போது ஜனநாயகம் செழிப்பாகும். குறிப்பாக பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய நாட்டு மக்களே, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் கடைசி இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவை எட்டியுள்ளது.

    இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு. நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள். வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள். வாக்கு மெஷினில் பட்டனை அழுத்தும் முன் இரண்டு முறை யோசியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    • அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

    மக்களவை தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் மத்திய மந்திரிகள், வேட்பாளர்கள், பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    அரியானா மாநில முதல்வர் நயப் சிங் சைனி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

    பா.ஜனதா வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்.

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள்.
    • டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டெல்லி, அரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இவர்களில் 39 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 6.21 கோடி ரூபாய் ஆகும்.

    14 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 13 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 22 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 50 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாய் வரை உள்ளது. 25 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சம் வரை உள்ளது. 26 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

    அரியானா மாநிலத்தில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். டெல்லியில் 162 வேட்பாளர்களில் 68 பேர் கோடீஸ்வரர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் 162 வேட்பாளர்களில் 59 பேர் கோடீஸ்வரர்கள். பீகார் 35 வேட்பாளர்களும், ஜார்கண்டில் 25 வேட்பாளர்களும், ஒடிசாவில் 28 வேட்பாளர்களும், மேற்கு வங்காளத்தில் 21 வேட்பாளர்களில் கோடீஸ்வரர்கள்.

    இதில் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும். சந்த்ருப்த் மிஸ்ராவின் சொத்து மதிப்பு 482 கோடி ரூபாய் ஆகும். டாக்டர் சுஷில் குப்தாவின் சொத்து மதிப்பு 169 கோடி ரூபாய் ஆகும். நைனா சிங் சவுதாலாவின் சொத்து மதிப்பு 121 கோடி ரூபாய் ஆகும். மேனகா காந்தியின் சொத்து மதிப்பு 97 குாடி ரூபாய் ஆகும்.

    • டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.
    • அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

    இன்று காலை வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனர். இந்த நிலையில் காலை ஏழு மணிக்கு 58 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    ×