search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.
    • இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்துவரும் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வரும் 1-ம் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    அடுத்த மாதம் 4-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து அந்தக் கட்சி பிரசாரம் செய்துள்ளது.

    ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனக்கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வரும் 1-ம் தேதி பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியானது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.
    • நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கொள்காட்டி வெளியிட்டுள்ள பதிவில்,

    அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

    20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,

    519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,

    22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள்,

    புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.

    நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! என்று கூறியுள்ளார்.


    • நாள்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சம்பந்தமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
    • மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    கடந்த 36 மாத தி.மு.க. ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன என்பது பல்வேறு கொடும் சம்பவங்கள் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய சாவுகள்; கோவையில் கார் குண்டு வெடிப்பு, அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுடன் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம் என்று நாள்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சம்பந்தமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற இருமாப்போடும், துணிச்சலோடும் சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.

    தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதி' களை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    சென்னை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 131 ஆண்டுகள் பழமையான இந்த அணை மூலம் தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அணை பலவீனமாக உள்ளதாகவும், இயற்கை சீற்றங்களின் போது அணையை சுற்றி உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் கேரளா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் திட்ட அறிக்கை தயாரித்து தாக்கல் செய்துள்ளது.

    கேரள அரசின் இந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கேரளா அரசு மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    தமிழக விவசாயிகளும் கடந்த சில நாட்களாக தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக நேற்று முன்தினம் நடக்க இருந்த நிபுணர் குழு கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் முல்லை பெரியாறு அணையை பார்வையிட மத்திய நீர் ஆணைய நிர்வாக என்ஜினீயர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஜூன்) 13 மற்றும் 14-ந்தேதிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இவர்கள் அணை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது? ஷட்டர்கள் பலமாக உள்ளதா? அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்திய துணைகுழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
    • 2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியத் திருநாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அர்ப்பணிப்பு உணர்வுகளால், விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார்.

    முதலமைச்சர் இத்துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப்பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட அதற்கான அறிவிப்பினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

    பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டமிடல் காரணமாக தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப்புகழ்பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை மாமல்லபுரத்தில் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளை சார்ந்த

    2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில் தமிழக அரசின் விருந்தோம்பலை கண்டு வியந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சர்வதேச அலை சறுக்குப் போட்டி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.

    ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டு மொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

    2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான இணைய தளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
    • பல்வேறு திட்டங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

    கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் சாதனம் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டிட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான இணைய தளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 லட்சம் ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் ரூ.25 லட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 லட்சம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மீண்டும் உத்தமர் காந்தி விருது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை திட்டம், ஊரக வீடு வழங்கும் திட்டங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரசாரம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி வரை சுழல்நிதி ரூ.629.55 கோடி, சமுதாய முதலீட்டு நிதி ரூ.629.55 கோடி நலிவு நிலை குறைப்புநிதி ரூ.14.59 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,56,508 மகளிர் சுய உதவிக் குழக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.71,960.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு ஆண்டில் 6,800 மாற்றுத்திறனாளி குழுக்களுக்குத் தொழில் துவங்கிடும் நோக்கில் சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து 40.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    45,150 நகர்ப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
    • தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும், டெல்லியில் 1-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    • காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
    • அதில், வாக்கு எண்ணிக்கையின்போது பூத் முகவர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட் டம்" வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.

    அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள்.
    • இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது.

    ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 1-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    இதனிடையே, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    முன்னதாக, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
    • பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறது. இதுவரை தமிழக மாணவர்கள் வங்கிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள். கடனை ரத்து செய்ய இந்த 3 ஆண்டுகளில் இதுகுறித்து எந்த அறிக்கையையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

    ஆனால் தற்போது நிதி நிலை அறிக்கையில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வங்கியின் மூலம் கிடைக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது?

    கேஸ் மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் உள்ளன. எப்போது தருவார்கள். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை தி.மு.க. ஆட்சியில் 13 பேர் தற்கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்தை வாங்கி அனுப்புவோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கியவை எல்லாம் குப்பை தொட்டியில் போடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தவில்லை. மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.

    இன்றைக்கு பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பை போல மு.க.ஸ்டாலின் ஜூன் 4-ந்தேதிக்கு கொடி ஏற்ற தயாராகுங்கள் என்று கூறியிருக்கிறார். அதே போல அண்ணாமலையும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். ஆனால் இன்றைக்கு மக்கள் தெளிந்த நீரோடை போல் இருக்கிறார்கள். இந்த இருவரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலைக்கு கனவாகவே இருக்கும்.

    இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர் மழை காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால் நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல்பயிர் சாகுபடி செய்த நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாளாக பெய்த கனமழையால் நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

    அதேபோல், ராதாபுரம் தாலுகா கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது.

    ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வுசெய்து, இதனை பேரிடராக கருதி அரசு உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழு நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளது.

    • கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
    • கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

    வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் 3 நாட்களில் அதற்கான பிரசாரம் ஓய உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது.

    ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள்.

    இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

    இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் 4-ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்த இருப்பதால் அந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வார் என்று தெரிகிறது. அவர் டெல்லி பயணம் மேற்கொள்ளாவிட்டால் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது.

    கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் தேர்வு பற்றியும் 1-ந்தேதி கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெஜ்ரிவால் சிறைச்சாலைக்கு திரும்பும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வாரா? என்று தெரியவில்லை. என்றாலும் அவர் இந்தியா கூட்டணி எடுக்கும் முடிவுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக உறுதி அளித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதன் காரணமாக 1-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தை பா.ஜ.க. தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    ×