search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபில் சிபில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
    • இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்

    கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.

    இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.

    இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • நீட் தேர்வுக்கு எதிராக வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
    • எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் தேர்வு தொடர்பாக வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

    நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரம் தொடர்பாக வார்த்தைப் போர் ஏற்பட்டிருக்கிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றதாகும். எங்களது வாக்குப்பதிவு முறை குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள் வெளிப்படையாக இல்லாதபோது ஜனநாயகம் போலியாவதோடு, ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும் என்றார்.

    இந்நிலையில், மாநிலங்களவை எம்பியான கபில் சிபல் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கபில் சிபல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீட் தேர்வு, குஜராத் மாடல், வெளிப்படையான ஊழல், வெளிப்படையான கையாளுதல், தயவுசெய்து கவனிக்கவும்: மோடிஜியின் 'சுத்தமான' மௌனம் என பதிவிட்டுள்ளார்.

    ×