search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா பெண் கொலை"

    • சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
    • மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

    இந்த விசாரணையின்போது மேற்கு வங்காள அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. முதல் தகவல் அறிக்கையை தாமதமாக பதிவு செய்தது, வன் முறை தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தது. டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

    கடந்த விசாரணையின்போது பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து மேற்கு வங்காள போலீசை சாடியது.

    இந்த நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் தொடங்கியது.

    சி.பி.ஐ. தனது விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதுவரை என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தனது அறிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல மேற்கு வங்காள அரசின் சுகாதார துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'டாக்டர்கள் போராட்டத்தில் 23 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 2 அறிக்கையை வைத்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தொடங்கியது. பெண் பயிற்சி டாக்டரின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பிற்பகல் 2.55 மணிக்கு பதிவு செய்யப்பட்டது என்று, இறப்பு சான்றிதழ் 1.45 மணிக்கு வழங்கப்பட்டது என்றும் மேற்கு வங்காள அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபில் தெரிவித்தார். வீடியோ பதிவுகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.

    சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான தடயவியல் மாதிரிகள் மேற்கு வங்காளத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மாதிரிகளை அனுப்ப விசாரணை நிறுவனமான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார்.

    இதை தொடர்ந்து வரு கிற 17-ந்தேதி விசாரணையின் புதிய நிலை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
    • போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ந்தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். தற்போது இரவை மீட்டெடுப்போம் என போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண் மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், "போலீசார் முழுமையான விசாரணையின்றி வழக்கை முடிக்க முயற்சித்தனர். போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர். எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மகள் கொலைக்கு பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களிடம் பணத்தை கொடுக்க முயன்றார். நாங்கள் உடனடியாக அதை மறுத்தோம்" எனத் தெரிவித்தனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கொல்கத்தா காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

    • போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.
    • பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.



    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.


     

    மேலும், நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைத்து, கோஷங்களை எழுப்பினர். இதே போன்று கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ்-ம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார். 

    ×