search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விராட் கோலி"

    • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    பெங்களூரு:

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் சிக்கி, 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்) முதலிடத்திலும், ராகுல் டிராவிட் (13,265 ரன்) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122 ரன்) 3வது இடத்திலும் உள்ளனர்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
    • வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார்.

    கான்பூர்:

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    வங்கதேச அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 285 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனைச் சந்தித்து, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.

    ஷகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • ரீபிளேயில் பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்ததால் இந்திய அணி ஏமாற்றம்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் ஸ்கோர் 28 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதனைத்தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். ஸ்கோர் 67 ரன்னாக இருக்கும்போது மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 20 ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி காலில் வாங்கினார். மெஹிதி ஹசன் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    விராட் கோலி எதிர்முனையில் நின்ற சுப்மன் கில்லிடம் இது தொடர்பாக கேட்டார். அப்போது சுப்மன் கில் சரியான எல்.பி.டபிள்யூ-வாகத்தான் இருக்கும் என்பதுபோல் தெரிவிக்க விராட் கோலி டி.ஆர்.எஸ். கேட்காமலம் வெளியேறினார்.

    ஆனால் ரீபிளே-யில் பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடை தாக்கியது தெரியவந்தது. இதனால் டி.ஆர்.எஸ். கேட்காமல் விராட் கோலி பரிதாபமாக ஆட்டமிழந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா, என்னப்பா இது? டி.ஆர்.எஸ். கேட்டிருக்கலமே... என்ற வகையில் ரியாக்ஷன் கொடுத்தார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் லேசான சந்தேகம் இருந்தால் கூட கவலைப்படாமல் டி.ஆர்.எஸ். கேட்பார்கள். ஆனால் இந்தியாவிடம் 3 டி.ஆர்.எஸ். இருக்கும் வேலையில் ஏன் கேட்காமல் விட்டாரோ தெரியவில்லை.

    ×