search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    • பலத்த காயம் அடைந்த முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி என்ற அலிகான் (வயது 58), பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்.

    இவர் அழகியமண்டபம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செய்யது அலி என்ற அலிகான் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் முகம்மது சர்ஜுன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    • வில்லிவாக்கத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் ராஜாஜி நகர், காமராஜர் தெருவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ஆட்டேவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த எண்ணுாரை சேர்ந்த ரஞ்சித்குமாரை(37) கைது செய்தனர். அவர் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரியவந்து. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கொடுமுடி அருகே துணிகரம் பேக்கரியில் செல்போன் திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் காச்சக்கார மேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி (25). அதேபகுதியில் உள்ள நால் ரோட்டில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது பேக்கரி கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து டீ கேட்டார்.

    கல்யாண் சக்கரவர்த்தி அந்த நபருக்கு டீ போட்டுக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு மற்றொரு நபருக்கு டீ போட சென்றுவிட்டு மீண்டும் தனது கல்லா பெட்டி அருகே வந்தார்.

    அப்போது அங்கு வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் இருக்கும்.

    டீ கேட்டு வந்த நபர் மீது சந்தேகம் அடைந்த கல்யாண்சக்கரவர்த்தி அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் வேகமாக சென்றார்.

    உடனடியாக கல்யாண் சக்கரவர்த்தி அங்கு இருந்த–வர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரி த்ததில் அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்கிற சேகர் என தெரியவந்தது. அவர் செல்போன் திருடி–யதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சேகரை மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரின் சீட்டுக்கு அடியில் 30 பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • காரில் மதுப்பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் மெயின் ரோட்டில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரின் சீட்டுக்கு அடியில் 30 பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில், காரை ஓட்டி வந்தவர் திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 22) என்றும், காதணி விழாவுக்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் சுதாகரை கைது செய்தனர். மதுப்பாட்டில்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கொல்லுமாங்குடி நாட்டாறு பாலம் அருகில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவர் கொல்லுமாங்குடி நாட்டாறு பாலம் அருகில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து சென்ற பேரளம் போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து உலகநாதனை கைது செய்தனர்.

    • போலீசார் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இளம்பெண் உள்பட 2 பேர் கைது
    • கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிச னுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வியாபாரிகள் 59 பேரின் வங்கிக் கணக்கு களும் முடக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் கஞ்சா விற்பனையை கண்காணித்து வருகிறார்கள். மார்த் தாண்டம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டபோது அங்கு சந்தே கப்படும் படியாக நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

    அப்போது அவரது கையில் இருந்த பேக்கை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து அந்த வாலிபரையும் இளம்பெண்ணையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் கண்ணனூர் பூந்தோப்பை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 25), சென்னை பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த அஜந்தா (38) என்பதும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கஞ்சா பொட்டலங்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். இங்கு யாரிடம் சப்ளை செய்ய கொண்டு வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அம்மாபேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (35). லாரி டிரைவர்.

    இவர் நேற்று மாலை அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தர வேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நாக ராஜை எச்சரித்தனர்.

    மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாகராஜ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகராஜ் போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து தாக்கி பேனாவால் குத்தினார். மேலும் அவரின் கை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் ஏட்டு முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

    இது குறித்து போலீஸ் ஏட்டு அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடைக்குள் சென்றதும் சிறுவனுக்கு வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், வாசுதேவனின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தான்.
    • மகனின் நண்பருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள துடியலூர் பிரஸ்காலனி பாலாஜி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 44). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நோட்டு-புத்தகம் வாங்குவதற்காக சென்றான். அந்த சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனும், மளிகைக் கடைக்காரர் வாசுதேவனின் மகனும் நண்பர்கள் ஆவர்.

    இதனால் அந்த சிறுவன் வாசுதேவனுக்கு நன்கு அறிமுகமானார். நோட்டு புத்தகம் வாங்கச் சென்ற சிறுவனை ஏன் வெளியே நிற்கிறாய், கடைக்குள் வா என வாசுதேவன் அழைத்தார்.

    கடைக்குள் சென்றதும் அந்த சிறுவனுக்கு வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், வாசுதேவனின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தான்.

    பின்னர் கடையில் நடந்த சம்பவம் குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதான். உடனே சிறுவனின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வாசுதேவனை கைது செய்தனர்.

    • பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு

    மதுரை

    மதுரை கீழ் மதுரை, சி.எம்.ஆர் ரோடு, அரிஜன காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெற்றிவேல் பாண்டி என்ற டங்காரு (வயது 22). இவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வெற்றிவேல் பாண்டி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

    எனவே வெற்றிவேல் பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி வெற்றிவேல் பாண்டி என்ற டங்காருவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

    • இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • ராமாபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    ஆவடி பகுதியை சேர்ந்தவர் நலன்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரான்சி மோனிகா.

    கடந்த 2-ந் தேதி காலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மோனிகா கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ராமாபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) என்று தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் குட்கா விற்பனை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநகரில் பல்வேறு இடங்களில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட நபர்களை கைது செய்து போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று சனிக்கிழமை வரை 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக தொடர்ந்து குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த 25 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×