search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94468"

    ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.

    இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்ற தக்காளி பின்னர் ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனையானது.

    தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து தக்காளி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பெட்டி தக்காளிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைந்த அளவில் தக்காளி கொண்டு வரப்பட்டதால் விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,500 வரை விற்பனையானது. இதேபோல் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1200 வரை விற்பனையானது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இன்று 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்தானது. இதன் காரணமாக இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென குறைந்தது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ.650 முதல் ரூ.700 வரையும் விற்பனையானது.

    இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.

    அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். தொடர்ந்து, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது. கோயம்பேட்டு சந்தையில் நேற்று முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30 குறைந்து,  கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது. இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது.

    ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து, இன்று 45 லாரிகளாக உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து மேலும் அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. 13-15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை பழக்கம்- கணக்கெடுப்பில் தகவல்
    பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை அதிகரித்து வருகிறது.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 450 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் 75 சதவீதம் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

    ஆனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட காய்கறி செடிகள், தோட்டங்கள் பெரும்பாலும் மழை வெள்ளத்தால்அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்து உள்ளது.

    உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி 70 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 40 லாரிகளாக குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது.

    இன்றும் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே கோயம்பேட்டில் உள்ள சில்லரை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட் மற்றும் காய்கறி சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 150-ஐ கடந்து விற்கிறது.

    இதற்கிடையே தக்காளியை தொடர்ந்து பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பன்னீர் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 100-ஐ கடந்து செல்ல தொடங்கி விட்டது.

    இதனால் தினசரி காய்கறி வாங்க கடைக்கு செல்லும் இல்லத்தரசிகள் பலர் காய்கறிகளின் விலையை கேட்டு கவலை அடைந்து வருகின்றனர். மேலும் தேவையான காய்கறிகளை கடைகளில் குறைந்த அளவில் வாங்கி திரும்பி செல்கிறார்கள்.

    இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி சில்லரை விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    தக்காளி- ரூ. 120, பீன்ஸ்- ரூ100, அவரைக்காய்- ரூ. 110, வெண்டைக்காய்-ரூ. 100, உஜாலா கத்தரிக்காய்- ரூ. 90, முருங்கைக்காய்-ரூ. 150, முட்டை கோஸ்-ரூ. 50, ஊட்டி கேரட்-ரூ. 70.
    பண்ணை பசுமை அங்காடி விற்பனையை மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் ராஜதுரை ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    தூத்துக்குடி:

    காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்களால் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் தூத்துக்குடி, சென்னை, கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் 65 கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரம் கார்த்திகை மாதம் பிறப்பு காரணமாக காய்கறிகளின் தேவை அதிகரித்தது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 140 வரை விற்கப்பட்டு வருகிறது.

    தற்போது காய்கறி விலை உச்சத்தை எட்டி உள்ள நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அதிகளவில் காய்கறிகளை விற்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வழங்குவதற்காக முதற்கட்டமாக தினசரி ரூ. 15 டன் தக்காளி கொள்முதல் செய்யவும் பின்னர் அதை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் பல்வேறு காய்கறிகள் விற்கப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை வெளிச்சந்தையில் ரூ. 140 வரை விற்கப்படும் நிலையில் அங்கு ரூ. 85-க்கு விற்பனையானது.

    வெளிச்சந்தையை விட குறைவான விலையில் விற்பனையானதால் ஏராளமான பொதுமக்கள் அதனை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பண்ணை பசுமை அங்காடி விற்பனையை மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் ராஜதுரை ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



    கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ஒரு நாள் தக்காளித் தேவை 5 ஆயிரம் டன் ஆகும். சென்னையின் ஒரு நாள் தக்காளித் தேவை மட்டும் சுமார் 1000 டன் ஆகும். ஆனால், தமிழகத்தின் மொத்தத் தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும் தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    நியாயவிலைக் கடைகளைப் போலவே பண்ணை பசுமை கடைகளும் விலைக்கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவம் ஆகும். வெளிச்சந்தையில் பதுக்கல் காரணமாக விலைகள் உயரும்போது, பண்ணை பசுமைக் கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்பட்டால், அதனால் வெளிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தால், பதுக்கப்பட்ட பொருட்கள் வெளியில் கொண்டுவரப்படும். அதனால் விலைகள் குறையும் என்பது தான் அரசு நிறுவனங்கள் மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான காரணம். சந்தையில் சமநிலையை ஏற்படுத்துவது தான் இந்தத் தத்துவத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

    தக்காளி

    ஆனால், இப்போது பதுக்கல் காரணமாக விலை அதிகரிக்கவில்லை. மாறாக, பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்தது தான் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும், தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா வரை இதே நிலை தான் என்பதால் சந்தைச் சமநிலை மூலம் காய்கறிகள் - தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

    மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

    கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகள் அனைத்தும் அழுகி வீணாகி விட்டதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
    காரமடை:

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, நாச்சிபாளையம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, மதுக்கரை, பிச்சனூர், திருமலையம்பாளையம், ரொட்டி கவுண்டனூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, செம்மேடு, மாதம்பட்டி, சென்னனூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் மற்றும் காரமடை சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளிகள் பயிரிடப்படுகின்றன.

    இங்கு பயிரிடும் தக்காளிகளை கோவையில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கோவை மார்க்கெட்டுக்கு கோவை சுற்றுவட்டார பகுதிகளை தவிர கர்நாடகாவில் இருந்தும் தக்காளிகள் வந்தது.

    கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர்களுக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் தக்காளி செடிகள் அனைத்தும் நாசமாகின. மேலும் தக்காளி பழங்கள் செடியிலேயே கருகி அழுகும் நிலையும் காணப்படுகிறது.

    தக்காளி செடியில் பூ, காய்கள் பூத்து, பழங்கள் பறித்து விற்பனைக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயாராகி வந்தனர். ஆனால் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி செடிகள் அனைத்தும் அழுகி வீணாகி விட்டதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர் மழையால் பயிர்கள் சேதம் மற்றும் வரத்து குறைவு எதிரொலி காரணமாக கோவை மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது.

    மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு டிப்பர்(25 கிலோ) தக்காளி ரூ.1800-க்கும், ஒரு கிலோ ரூ.70-க்கும் விற்பனையாது. நாட்டு தக்காளி ஒரு டிப்பர் ரூ.1500-க்கும், ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.

    மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து தக்காளியை வாங்கி வந்து சில்லரை மார்க்கெட்டுகளில் விற்கும் போது விலை கூடுதலாக காணப்படுகிறது. கடந்த வாரம் வரை சில்லரை மார்க்கெட்டில் ரூ.50க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி தற்போது வரலாறு காணாத அளவுக்கு ரூ.140-க்கு விற்பனையாகிறது. வரத்து தொடர்ந்து குறைந்தால் விலையும் தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்புள்ளது.

    ஆப்பிள் பழங்களும் ரூ.140-க்கு விற்பனையாகிறது. அதே விலைக்கு தற்போது தக்காளியும் விற்பனையாவதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். தக்காளி அனைத்து சமையல்களுக்கு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தற்போது தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை யூடியூப்பில் மக்கள் தேடி பார்த்து வருகிறார்கள்.
    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த 3 வாரங்களாக அந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி தோட்டங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 450 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த காய்கறிகளின் வரத்து திடீரென பாதியாக குறைந்துவிட்டது. தற்போது தினசரி 200 முதல் 250லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாகவே காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. இனி வரும் நாட்களில் கனமழை தொடரும் பட்சத்தில் காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி பெட்டி (14கிலோ) ரூ.1300க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.130க்கும், உஜாலா கத்தரிக்காய் ஓரு கிலோ ரூ.60க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.70க்கும், பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60க்கும், அவரைக்காய் மற்றும் பாகற்காய் ஒரு கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகள் மற்றும் வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100க்கும், கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய், ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பல வகையான காய்கறிகளை வீட்டுக்கு வாங்கி சென்று சமைப்பதை விட்டுவிட்டு தற்போது ஒன்று இரண்டு காய்கறிகளை மட்டுமே அதுவும் ¼ கிலோ, ½ கிலோ என குறைந்த அளவிலே வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி சராசரியாக 100 டன் மற்றும் அதற்கும் மேல் காய்கறிகள் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    ஒட்டன்சத்திரம்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கனமழை கொட்டித் தீர்த்ததால் பந்தல் தக்காளி மட்டுமே தப்பியது. தரையில் விளையும் தக்காளி முற்றிலும் அழுகியது. இதனால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு தக்காளிகளே வருகிறது.

    அதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கிச் செல்வதால் விலை கிடுகிடுவென அதிகரித்தது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் லேசாக உடைந்த தக்காளிகளை சாலையில் கொட்டிச் சென்ற நிலையில் தற்போது அந்த தக்காளிகளுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு வியாபாரிகள் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறியுள்ளது.

    தக்காளி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி சராசரியாக 100 டன் மற்றும் அதற்கும் மேல் காய்கறிகள் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி விலை உயர்வு காரணமாக 2 தக்காளிகளை பேக்கிங் செய்து அதனை ரூ.18 என்று விலை நிர்ணயம் செய்து அனுப்பி வருகின்றனர்.

    இதே போல பேக்கிங் செய்த தக்காளிகள் அதிக அளவு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சந்தைகளில் 1 கிலோ ஆப்பிள் ரூ.70 முதல் விற்கப்படும் நிலையில் அதைக்காட்டிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு வாரங்கள் இதே நிலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.


    மகாராஷ்டிராவில் இருந்து வரும் தக்காளி தரமாக உள்ளதால் சில்லரை வியாபாரிகள் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 46 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் அதன் விலை திடீரென அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்றும் மகாராஷ்டிராவில் இருந்து 2 லாரிகளில் 25 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.1200-க்கும் மகாராஷ்டிரா தக்காளி ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சில்லரை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளி சீசன் தொடங்கி உள்ளது. தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம்.

    மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மழையடி தக்காளிகள் தான் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.

    மகாராஷ்டிராவில் இருந்து வரும் தக்காளி தரமாக உள்ளதால் சில்லரை வியாபாரிகள் அதை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் இதன் வரத்து காரணமாகவே தற்போது தக்காளி விலை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊட்டியில் வரத்து குறைவால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் ஊட்டிக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்ததால் சமவெளி காய்கறிகள் விலை கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்தனர். அங்கு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழமாக இல்லாமல் காயாக இருந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தினமும் உழவர் சந்தைக்கு கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து 2,200 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தொடர் மழை காரணமாக 1,700 கிலோ விற்பனைக்கு வருகிறது. மழையால் பழங்கள் சேதம் அடைந்ததால் காய்களாக பறித்து அனுப்பப்படுகிறது என்றார்.

    உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.70, கத்தரிக்காய் ரூ.75, வெண்டைக்காய் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.48, பெரிய வெங்காயம் ரூ.42, முருங்கைக்காய் ரூ.95, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை கடந்த 2 வாரங்களில் 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் காய்கறிகள் வாங்கும் அளவை குறைத்து இருக்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100, கத்தரிக்காய் ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    தொடர் மழையின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.75-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகளும், பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகளும், தினசரி காய்கறி கடைகளும் உள்ளன. இந்த சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டுவந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.

    பெரும்பாலான காய்கறிகள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

    இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தாக்கு பிடிக்க முடியாமல் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும், சந்தைகளுக்கு போதுமான அளவு வரத்து இல்லாததால் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில கடைகளில் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு மேச்சேரி, மேட்டூர், காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை காரணமாக செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது.

    இதனால் நாட்டு தக்காளி, ஆப்பிள் தக்காளி சந்தைகளுக்கு குறைந்தளவே வருகிறது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது என்றனர்.
    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்த தோட்டங்களும் மழை வெள்ளத்தால் நாசமாகி விட்டது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக 70 லாரிகளில் வரும் தக்காளி தற்போது பாதியாக குறைந்து விட்டது. கடந்த ஒரு வாரமாகவே இது நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.72க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தக்காளி ஒரு கிலோ ரூ100-யை எட்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடைகளில் ½ கிலோ, ¼ கிலோ என குறைந்த அளவிலான தக்காளியை மட்டுமே வீட்டுக்கு வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து மொத்த வியாபாரி ஜபார் பாய் கூறியதாவது :-

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது. விலை உயர்வு காரணமாக கடந்த 2 நாட்களாக தக்காளி விற்பனை மிகவும் மந்தமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×