search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலை"

    கூடுவாஞ்சேரி சாலையில் முதலை வந்ததாக பரவும் வீடியோ குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

    இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர்  ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான வீடியோ தவறானது. சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்.

    சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது முதலை இழுத்துச் சென்ற விவசாயியை தீயணைப்பு படையினர் 2-வது நாளாக தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.

    2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

    ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருங்களத்தூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றிய 5 அடிநீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டையில் இருந்து சுமார் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையை கடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அதே பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது. இதனை கண்ட அப்பகுதி வாலிபர்கள் போலீசுக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர்களே ஒன்று சேர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். பின்னர் கயிற்றால் முதலையின் வாய் மற்றும் கால் பகுதியிகளை கட்டி வைத்தனர். பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருந்தது.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலை பிடிபட்டது பற்றி வன விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும், வனத்துறையினரும் விரைந்து வந்து முதலையை மீட்டு எடுத்து சென்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறிய குட்டிகளாக இருக்கும் முதலைகளை பறவைகள் உணவுக்காக அங்கிருந்து தூக்கி வந்து விடுகின்றன. அப்படி வரும் முதலைகள் தவறி நீர்நிலைகளில் விழுந்து அங்கேயே வளர்ந்து விடுகிறது.

    ஆண்டுதோறும் வெயில் காலங்களில் ஏரி, குளங்களில் நீர் வற்றுவதால் முதலைகள் அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.

    இப்போது வெயிலின் தாக்கத்தால் குட்டையில் உள்ள நீர் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளது. இதே போல் பல முதலைகள் குட்டைகளில் உள்ளன. அவற்றை வனதுறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள விவசாயி தோட்டத்தில் முதலை புகுந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆறு, முதலைகள் நிறைந்த பகுதியாகும்.

    ஏராளமான முதலைகள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் செல்லும்போது ஆற்றுக்குள் இருக்கும் முதலைகள் வெளியே தென்படுவதில்லை.

    ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டால் முதலைகள் தண்ணீரை தேடி, ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் அணைக்கரை விநாயகம் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று திடீரென ஒரு முதலை புகுந்தது.

    அந்த முதலை எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

    இதுகுறித்து திருவிடைமருதூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பள்ளத்தில் இருந்து வெளிவர முடியாமல் போராடிக்கொண்டிருந்த முதலை மீது கயிற்றை கட்டி மீட்டு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விட்டனர்.

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் வர தொடங்கி இருப்பதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ஆஸ்திரேலியாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்த 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர். #crocodile #Australia
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.

    இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.

    5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.



    இதற்கு முன்பு 1974-ம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண்முதலை பிடிக்கப்பட்டது.6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது. #crocodile #Australia 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சுந்தரவனக் காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றில் இன்று இறால் பிடிக்கப் போனவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Crocodilegobbled #Sundarbansfisherman
    கொல்கத்தா:

    உலகின் மிகப் பெரிய சதுப்புநில சுந்தரவனக் காடுகள் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான மேற்கு வங்காளம் மாநிலம் வரை நீண்டு காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24-வது தெற்கு பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இங்குள்ள போனோஷம்நாலர் கிராமத்தை சேர்ந்த சிலர் கும்பலாக சென்று இந்த காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஜகடல் ஆற்றில் இன்று இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.

    காலை சுமார் 11 மணியளவில் தண்ணீருக்குள் உடலை மறைத்தபடி வந்த ஒரு முதலை இறாலுக்காக வலைவீசி விட்டு காத்திருந்த ஜரேஸ்வர் மொன்டல் என்பவரை திடீரென்று கவ்வி இழுத்துச் சென்றது.

    அருகில் இருந்தவர்கள் அலறியடித்து சில மீனவர்களின் துணையுடன் ஆற்றுநீரில் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது. முதலை வாயில் சிக்கிய அந்நபர் இனி உயிருடன் திரும்பும் வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Crocodilegobbled #Sundarbansfisherman 
    கர்நாடக மாநிலம் மாண்டியாவின் முத்தாதி சுற்றுலா பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் முதலை தாக்கியதில் 52 வயது நபர் உயிரிழந்தார். #crocodileattack
    மாண்டியா:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் முத்தாதி சுற்றுலா பகுதியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். சிலர் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 52 வயது நபரும் காவிரி ஆற்றில் குளித்தார். தண்ணீரில் நீச்சலடித்தபடி சற்று தொலைவுக்கு சென்றபோது, திடீரெனை அவரை முதலை தாக்கி ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப் பார்த்த மற்றவர்கள் கூச்சலிட, சில இளைஞர்கள் ஆற்றினுள் குதித்து முதலையை கம்புகளால் தாக்கினர். முதலை சற்று மிரண்ட சமயத்தில், அதன் வாயில் சிக்கியிருந்த வெங்கடேசை வெளியே இழுத்தனர். ஆனால், அதற்குள் வெங்கடேஷ் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. முத்தாதி சுற்றுலா பகுதியில் முதலை தாக்கி உயிரிழப்பது இதுவே முதல் முறை என்று சூழியலாளர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #crocodileattack
    ×