search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • மேல்முறையீட்டு வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளில் இடைக்கால தடை கேட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கூட்டப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த 12-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதை நிராகரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி தொடர்பாக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. தற்போது எந்த ஒரு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். மேலும் இந்த வழக்குகள் 20 மற்றும் 21-ந்தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

    இன்றும், நாளையும் பிற்பகலில் இந்த வழக்கு சிறப்பு வழக்காக விசாரிக்கப்படுகிறது. நாளை மாலை இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?
    • அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகமாக உள்ள புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவித்துள்ளார். டி.அன்பரசனை எதிர்த்து அந்த மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதுபற்றி டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி தேர்வு செய்தது. ஆட்சிமன்ற குழு முடிவின் படி புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆவார்.

    ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்து இருப்பது பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர் அ.தி.மு.க.வில் இல்லை. கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்?

    அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும். ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் 2 கட்ட அமர்வுகளில் ஆலோசித்தனர்.
    • கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதற்கிடையே சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

    இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அந்த முடிவுகளை இன்று அல்லது நாளை டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

    • உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே மாதம் 1-ந்தேதி மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மே தின கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாடும் வகையில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற மே மாதம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பாளர் அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார்.
    • அ.தி.மு.க.வுக்கு 'சீட்' ஒதுக்காமல் பா.ஜ.க. கைவிரித்து விட்டது.

    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தங்கள் விருப்பத்தை கூட்டணி கட்சியான பாஜகவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளாக அன்பரசன் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகேசி நகர் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

    அ.தி.மு.க.வுக்கு சீட் ஒதுக்காமல் பாஜக கைவிரித்து விட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 20ம் தேதி நடக்கும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
    • தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை பதவியை பிடிக்கும் போட்டியில் மோதல் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று கூறி இருந்தது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளதால் அவரது செல்வாக்கு கட்சியில் ஓங்கி விட்டது.

    இந்த நிலையில் ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட தீர்மானங்களை அ.தி.மு.க. வின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி சார்பில் வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.

    இப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து விட்டனர்.

    இந்த சூழலில் கர்நாடக மாநில தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற சிக்கல் உருவாகி உள்ளது.

    எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி குரு சந்திரா விசாரித்தார். அப்போது இந்த பிரச்சினையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.

    முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

    இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவெடுக்க உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இதற்கான ஆலோசனை இன்று நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
    • பொதுக்குழு தீர்மானங்களை திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகும் தொடர்ந்து சட்ட போராட்டங்கள் மூலம் ஓ.பன்னீர்செல்வம் விரட்டி கொண்டிருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கும் தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்களை திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.

    கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட இருப்பதால் அ.தி.மு.க. மாற்றங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார்கள்.

    ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் குறிப்பிடப்பட்டது.

    ஆனால் தேர்தல் ஆணையம் கடந்த 2022 முதல் இதே பதிலை தெரிவித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடும்போது பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முடிவெடுக்க ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

    ஆனால் 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பெங்களூர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. கட்சியை வலுப்படுத்துவது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் சத்தமின்றி செய்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெறுகின்றன. கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

    தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. பூத் கமிட்டி அமைத்து கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தி.மு.க. தொடங்கி விட்டது. இதற்காக நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    இதே போல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருவதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். அதே போல் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    எனவே பா.ஜனதாவுடன் இணைந்து அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது, கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது, முகவர்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்பட்டது.
    • இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது.

    சென்னை :

    சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் வியாசை இளங்கோவன் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்றார். வியாசை இளங்கோவனின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது அவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, மாதவரம் மூர்த்தி, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்த நிர்வாகியும், தொண்டரும் பாதிக்கப்பட்டால் அவர்களது குடும்பத்துக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்போம். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிற காரணத்தால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி இப்படிப்பட்ட கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு நான் தொடர்ந்து கொண்டு சென்று வருகிறேன்.

    ஆனால் இந்த அரசு இதற்கு செவி சாய்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்பட்டது.

    மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20.8.2023 அன்று பிரமாண்ட முறையில் நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் மதுரையை நோக்கி பார்க்க கூடிய வகையில் இந்த மாநாடு இருக்கும். அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து இருக்கிறார்கள். அதற்குள் எங்களுக்கு சின்னம் கிடைக்கப்பெற்றால் தலைமை கழக நிர்வாகிகளுடன் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்படும்.

    அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்கள் அட்டை புதுப்பிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்.

    நான் சட்டசபையில், லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினேன். நான் பேசுவதற்கு முந்தைய செய்தியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். அதற்கு பின்னால் நடைபெற்ற கவன ஈர்ப்பையும் ஒளிபரப்பு செய்தார்கள்.

    நான் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து வைக்கிற போது அதனை அப்படியே இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.
    • வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறும்.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடியது.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    * 2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.

    * வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறும்.

    * திமுகவுடன் ரகசிய உறவு வைத்து அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டிட வேண்டும்.

    * விலைவாசி, சொத்துவரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், திமுக அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கவும், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடி உள்ளது.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு இதில் கலந்து கொண்டார்.

    இக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கவும், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    • அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
    • அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் 18 இடங்களில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் போன்றவற்றை வழங்கினார்.

    பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊழலிலே திளைத்த கட்சி தி.மு.க. என்று உலகத்திற்கே தெரியும். தி.மு.க.விற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.

    1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தி.மு.க.வினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம். அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம்.

    ஆனால் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

    அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். அதன் பின்னர் எங்களுடைய செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

    அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.

    விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது.

    ஒவ்வொரு போலீசாரும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவாயில்லை என் குழந்தையின் கால் போய் விட்டது, யார் மேல் ந வடிக்கை எடுப்பது என்று போராடுகிறார்.

    இந்த 2 வருடங்களில் போலீசாருக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள். காவல்துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×