search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
    • மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி

    கன்னியாகுமரி :

    குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங் கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித் துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச்சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும். 

    • புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

    கரூர் :

    கரூர் மாவட்டம் புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

    இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கலும், காத்தலும்) கன்னிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் 2-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • மதுரை இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

     மதுரை

    மதுரை இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரன்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை 1-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பிரிவுப்பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில், புதைவடம் (கேபிள்) இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்தம், முதலியார் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள்
    • குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழித்துறை, பேச்சிப் பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குன்னுவிளை, சானல்கரை, சாஸ்தான்குளம், கோட்டை குளம், மணிவிளை, வட்டியூர் கோணம், கட்டச்சல், வைகுண்டம், நெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அருள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அருள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணாநகர், செந்தூரான் காலனி, லட்சுமிநகர், குங்குமப்பாளையம், கவுண்டம்பாளையம், கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுபாளையம், குன்னாங்கால்பாளையம், மலையம்பாளையம், திருமலைநகர், அய்யாவுநகர், நொச்சிபாளையம், நொச்சிபாளையம் வாய்க்கால்மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 29-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியாயிபாளையம், கே.ஆா்.சி.அமிா்தவா்ஷினி நகா், கே.ஆா்.சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை.
    • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளா் இரா.தேவானந்த் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கரட்டூா், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டிணம், பாண்டியன்கரடு, ஆண்டியூா், பருத்தியூா், ரெட்டியாரூா், அம்மிசிகவுண்டனூா், தீபாலபட்டி, அா்த்தநாரிபாளையம், எரிசனம்பட்டி, தேவனூா்புதூா், வல்லக்குண்டாபுரம், ஜேஎன்.பாளையம், சாளையூா், ரெட்டிபட்டி, சா்க்காா்புதூா்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • மின்கம்பி மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பணி செய்யும் இடங்களுக்கேற்ப மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் பகிர்மான உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழித்துறை, மார்த்தாண்டம், பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆயிரம்தெங்கு, அம்மன்கோவில், துண்டத்தாறாவிளை, கடைவிளை, கபிரியேல்புரம், வள்ளக்கடவு, சாணி, தோட்டச்சாணி, ஆயவிளை, எருமத்துவிளை, குளப்பாறை, உருவிலாங்கோணம், திற்பரப்பு, கிலாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று ஜூலை 27 முதல் ஜூலை 30 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருமனை பிரிவுக்கு உள்பட்டகொழுந்திவிளை, கிருஷ்ணாநகர், கல்லுநாட்டி, மடவிளாகம், மங்கலத்துவிளை, கிருஷ்ணபுரை, மலைக்கோணம் பகுதிகளில் மின்கம்பி மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பணி செய்யும் இடங்களுக்கேற்ப மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 9-ந்தேதி 120.25 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை காற்றாலை மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மின்சார தேவை குறைந்துள்ளது. இந்த ஜூலை மாதத்துக்கான மின்சார தேவை 16,100 மெகாவாட் ஆகும். ஆனால் இந்த மாதம் மின் உற்பத்தி 17,183 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதத்தில் மின்சார தேவை 16,100 மெகாவாட் ஆக இருக்கும். ஆனால் 17,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல் செப்டம்பர் மாதத்தில் தேவை 15,800 மெகாவாட் ஆகவும், உற்பத்தி 16,617 மெகாவாட் ஆகவும், அக்டோபர் மாதத்தில் தேவை 15,000 மெகாவாட் ஆகவும் உற்பத்தி 17,375 ஆகவும், நவம்பர் மாதத்தில் தேவை 14,400 மெகாவாட் ஆகவும் உற்பத்தி 16,296 மெகாவாட் ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஜூலை மாதம் முதல் வருகிற நவம்பர் மாதம் வரை மின்தட்டுப்பாடு ஏற்படாது. இந்த 5 மாதங்களுக்கும் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    கடந்த 9-ந்தேதி 120.25 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மாநிலத்தின் நுகர்வில் 35 சதவீதம் ஆகும். இந்த மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள் 100 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் தினமும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.

    செப்டம்பர் மாதம் நடுப்பகுதி வரை காற்றாலை மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 5 மாதங்கள் மின் உற்பத்திக்கு பருவமழை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவை கைகொடுக்கும். இந்த காலகட்டத்தில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×