search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
    • அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல் அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

    இந்த நிலையில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் 2¼ கோடி இணையதளங்களை முடக்கியுள்ளதாக தலிபான் அரசின் தகவல் தொடர்பு மந்திரி நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் இதுவரை 2 கோடியே 34 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஒன்றை தடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு பெயரில் இணையதளத்தை தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது" என்றார்.

    மேலும் இது போன்ற இணையதளங்களை ஒடுக்க, தலிபான் அரசுடன் ஒத்துழைக்க பேஸ்புக் தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    • ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.
    • ஆப்கன் மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 9 கட்டமாக மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு பத்தாவது கட்டமாக மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் எங்களது சிறப்பான கூட்டாண்மை தொடர்கிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 10வது கட்டமாக கப்பலில் அனுப்பிய மருத்துவ உதவிப் பொருட்கள் காபூலில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் இன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 32 டன் மருந்து பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி.
    • சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன.

    தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அரசு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்று சில குடியிருப்பாளர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    வீடு இருந்த போதும் போதிய பணம் இல்லாததால், நாங்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்று பிச்சைகாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையான பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்தவும் அவர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆப்கான் தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

    பசி மற்றும் சுகாதார நெருக்கடி நிலை ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் ஜான் சிஃப்டன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது.
    • பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர்.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு ஏற்கனவே பல கடுமையான உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் ஊழியர்கள் தங்களுக்கு பதில் அந்த வேலையைச் செய்ய அவர்களின் ஆண் உறவினரை அனுப்புமாறு தலிபான்கள் கேட்டு கொண்டுள்ளதாக ஆங்கில செய்தி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அங்குள்ள பெண் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு தலிபான் அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு பதிலாக ஆண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என தலிபான்கள் தெரிவித்ததாக நிதித்துறையில் பணிபுரியும் அந்த பெண் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தான் பணியாற்றிய ஒரு பதவிக்கு மாற்றாக ஒரு ஆண் நபரை பரிந்துரைக்கும்படி அந்த நாட்டின் மனித வளத்துறையிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதமடைந்தன.
    • ஒன்பது மாகாணங்களில் உள்ள மற்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

    ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த வெள்ளத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும், கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. அத்துடன் நான்கு பாலங்கள் மற்றும் எட்டு கிலோமீட்டர் தொலைவு சாலை உள்பட ஒன்பது மாகாணங்களில் உள்ள மற்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

    கடந்த, ஜூன் மாதத்தில் இரண்டு நாட்களில் பெய்த கனமழையில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 131 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம்.
    • குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தலிபான் அரசின் தலைவரான ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். இந்த உறுதிமொழியை ஆப்கானிஸ்தானின் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் நாங்கள் அளிக்கிறோம்.

    அதேவேளையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். பரஸ்பர தொடர்பு தூதரகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளுடன் நல்ல முறையில் தொடர விரும்புகிறோம்.

    கல்வியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான மத மற்றும் நவீன படிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியை மேம்படுத்த கடினமாக உழைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.
    • தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு கடுமையான கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டன.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி டெல்லி திரும்பினார்கள்.

    இந்திய தூதரகமும் மூடப்பட்டது. இதனால் 10 மாதங்களாக தூதரகம் செயல்படாமல் முடங்கியது.

    இந்த நிலையில் காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இந்திய தொழில்நுட்ப குழுவினர் காபூல் சென்று உள்ளனர்.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில் நுட்ப குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர். சமீபத்தில் தலிபான் மூத்த தலைவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளனர்,

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்து விட்டனர். பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் காபூல் புறப்பட்டு சென்றது.

    இந்த பொருட்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தான் குறித்த பாதுகாப்பு கவுன்சில மாநாடு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் திருமூர்த்தி தெரிவித்தார்.
    • இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளது.

    ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் கடந்த புதன்கிழமை 5.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, பதிகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா, நாகா மற்றும் ஜிருக் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்த நிலநடுக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் 2000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான மக்கள் வீடு, உணவுகளின்றி பரிதவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் குறித்த பாதுகாப்பு கவுன்சில மாநாடு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவுக்கான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை இந்தியா பகிரந்துக் கொள்கிறது. மேலும், இந்த நேரத்தில் உதவி மற்றும் ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    • முன்னுரிமை அடிப்படையில் இ- விசாக்கள் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

    காபூல்:-

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கியர் உள்பட 2 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா முன்னாள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலையடுத்து ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள், இந்துக்களுக்கு 100 இ-விசாக்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இ- விசாக்கள் வழங்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    காபூல், ஜூன்.18-

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    குருத்வாரா கர்கே பர்வான் பகுதியில் குண்டுகள் வெடித்தன. இதனால் குருத்வாராவுக்குள் இருந்த சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வர முயன்றனர்.

    அப்போது தீவிரவாதிகள் குருத்வாராவுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் குருத்வாரா வின் காவலாளி அகமது என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    உடனே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் விரைந்து வந்தனர். அவர்கள் குருத்வாராவுக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. குருத்வாரா வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் கரும்புகை வெளியேறியது.

    தீவிரவாதிகள் தாக்கு தலால் குருத்வாராவில் இருந்து வெளியேற முடியா மல் ஏராளமான சீக்கியர்கள் சிக்கி உள்ளனர்.

    தாக்குதல் தொடங்கிய போது 3 பேர் வெளியே வந்து விட்டனர். இன்னும் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீக்கிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மற்றவர்கள் நிலைமை பற்றி தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும் போது, காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காபூலில் இருந்து வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கூடுதல் விவ ரங்களுக்காக காத்தி ருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, 'குருத்வாரா மீதான கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்களின் முதல் மற்றும் முதன்மையான அக்கறை சமூகத்தின் நலனில் உள்ளது என்றார்.

    குருத்வாரா மீதான தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ஐ.எஸ். கொரோசன் பிரிவு சமீபத்தில் 2020-ம் ஆண்டு நடந்த குருத்வாரா தாக்குதல் மீண்டும் நடத்தப் போவதாக மிரட்டல் வீடியோ வெளி யிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள குருஹர்ராய் சாகிப் குருத்வா ராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஏராள மான சீக்கியர்கள் இந்தியாவுக்கு வந்தனர்.

    • ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்
    • சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்

    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம். அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

    இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், "தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர். ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது என்றும் அது எங்கள் கொள்கை அல்ல என்றும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

    அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும் தலிபான் அமைப்பு கூறியது. 

    ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையும், அடுத்தடுத்த தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 

    இதற்கு அண்டை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

    இந்நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு, பொருளாதார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங்கள் கொள்கை அல்ல. 

    ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பது யாருக்கும் பயனளிக்காது.

    இவ்வாறு கூறினார்.

    ×