search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    • 10 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து மணக்குடி யைச் சேர்ந்த தோமஸ் (வயது 40) என்பவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணக்குடியைச் சேர்ந்த சுபின் (25), ஆன்றனி (32), சுனாமி காலனியைச் சேர்ந்த அகில் (23), ஷியாம் (25), நிகில் (20) ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மணக்குடி வின்சென் மேற்கு தெருவை சேர்ந்த ஆண்டனி கொடுத்த புகாரின் பேரில் சர்ச் தெருவை சேர்ந்த தாமஸ் (40), ராபின் (35), அகில் (21), டேவிட் (45), சூசை ஆகிய 5 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 294பி, 323, 506 2 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடற்கல்வியியல் கல்லூரிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் இறுதிப்போட்டி கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அழகப்பா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியின் முதல் பரிசை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும், 2-ம் பரிசை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் செந்தில்குமரன் வெற்றிக்கான கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் செய்திருந்தார். வெற்றிபெற்ற அணிகளுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குனர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.

    • பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.
    • இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட்டில் பொளந்துகட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவி ஒருவர் ஒரு மைதானத்தில் தன் வயது சக சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அபாரமான பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை அடித்து அசத்தியுள்ளார்.

    இந்த வீடியோவில் வைரலாகும் அந்த சிறுமியின் பெயர் முமல் மெஹர். இவருக்கு 14 வயதுதான் ஆகிறது. இவரது அதிரடியான பேட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் பகிர்ந்துள்ளார்.

    மாணவியின் பேட்டிங்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் மாணவியை பாராட்டினார்.


    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர் முமல் மெஹர். இது ஒரு சிறிய கிராமம். அவருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும். வெறும் 34 வினாடிகள் பேட்டிங் செய்து அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

    மூமல் கிராமத்தில் உள்ள தனது வயது சிறுவர்களுடன் தினமும் பள்ளியிலிருந்து திரும்பியதும் கிரிக்கெட் விளையாடுவார். மூமல் மெஹர் எட்டாம் வகுப்பு மாணவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிரும் போது அது வைரலாகி வருகிறது.

    முமல் மெஹர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    • சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

    சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை 'ஒரு படி முன்னேற்றம்' என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

    • இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
    • கடைசியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021ம் ஆண்டு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, மற்ற வீரர்களைப் போன்று பொதுவெளியில் அடிக்கடி தோன்றி மக்கள் பார்வையில் இருப்பவர் அல்ல. பொதுவாக சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருப்பார். எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை ஷேர்வார். இன்ஸ்டாகிராமில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அட்டேட்கள் வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்ப்பார்.

    இந்நிலையில், டோனி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். 'புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது' எனவும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் டிராக்டர் ஓட்டி தனது பண்ணையில் வயலை உழுவதை காணமுடிகிறது. விவசாயியாக மாறிய டோனியின் இந்த புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டோனி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இன்று மாலையில் வீடியோவை ஷேர் செய்த சில மணி நேரத்தில் 24 லட்சம் லைக்குகள் குவிந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    கடைசியாக டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், தனது பண்ணையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்து சாப்பிடுவதை காணலாம்.

    • முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்பான தகவல்கள் இணைதளத்தில் பதிவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர் கலந்து கொள்ளும் வகையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது பிரிவினர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கலாம்.

    இதற்கு, தங்கள் அணி யினரை www.sdat.tn.gov.in என்ற இணைதள முக வரியில் பதிவு செய்து விருதுநகர் மாவட்ட வீரர்-வீராங்கனைகள் பெருமள வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளுக்கு இணைதளத்தில் வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
    • ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதால், எதிர்கால போட்டிகளை கருத்தில் கொண்டு நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.

    கே.எல்.ராகுலும் அணியில் இல்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

    இந்திய டி20 அணி:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

    • அழகப்பா கல்வி குழும முன்னாள் மாணவர்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது..
    • முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது.

    காரைக்குடி

    அழகப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் உலகளாவிய அழகப்பா முன்னாள் மாணவர் கூட்டமைப்பு இணைந்து 75-வது வருட கொண்டாட்டத்தின் நிகழ்வாக அழகப்பா முன்னாள் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை பாவ்நகர் விளையாட்டு அரங்கில் நடத்தியது.

    அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன் வழிகாட்டுதலின்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போட்டியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    36 அணிகள் கலந்து கொண்டன. இதன் பரிசளிப்பு விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தலைமை தாங்கினார்.காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கேடயத்தை கானாடுகாத்தான் சேவாக் அணி வென்றது. 2-ம் பரிசு ரூ. 5ஆயிரம் மற்றும் கேடயத்தை அழகப்பா கலை கல்லூரி அணியும், 3-ம் பரிசு ரூ. 2,500 மற்றும் கேடயத்தை பாண்டியன் மெமோரியல் அணியும் வென்றன.

    சிறந்த பேட்ஸ்மேனாக கானாடுகாத்தான் சேவாக் அணியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக பாண்டியன் மெமோரியல் அணியின் தினேஷ், தொடர் நாயகனாக அழகப்பா கலை கல்லூரி அணியின் பாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அழகப்பா கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள் செய்திருந்தனர். கல்வி குழும மேலாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.
    • பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கேப்டன் பாபர் ஆசம் 27 ரன்களும், ஷான் மசூத் 35 ரன்களும் அடித்தனர். சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.

    சவுத் ஷகீல் 146 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அகா சல்மான் 30 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் அகமது சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் அகமது 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287 ஆக இருந்தது. ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.

    ஆனால், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இரண்டாவது போட்டியில் சதம் அடித்த சர்பராஸ் அகமது, பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

    • சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    • ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. உஸ்மானா கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். 56-வது டெஸ்டில் விளையாடும் கவாஜா 13-வது செஞ்சுரியையும், 92-வது போட்டியில் ஆடும் ஸ்டீவ் சுமித் 30-வத சதத்தையும் பதிவு செய்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 394 குவித்து இருந்தது.

    • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
    • ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பகுதி அவைத் தலைவர் குமார் செய்திருந்தார்.

    • டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • ரிஷப் பண்ட் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

    தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன், அவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×