search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
    • படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்தார்,

    புதுச்சேரி:

    காரைக்கால் கடற்கரை சாலையில், கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை படகை பார்க்க வந்த போது, படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் காரைக்காலை அடுத்த பட்டி னச்சேரி பகுதி யைச்சேர்ந்த ரகுபதி (வயது38) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்த னர்.

    • 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் உள்ள அண்ணா தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.

    இந்தக் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து சில்லரை காசுகள் ரூ.3664 -ஐ திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர்.

    இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றுசேர்ந்து சிறுவர்களை கையும் களவுமாக பிடித்து, கோயில் பொறுப்பாளரான ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜோதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறுவர்களை ஒப்படைத்துவிட்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி, குமாரபுரம், செண்பகராமன்புதூர், முப்பந்தல் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக இங்குள்ள சில காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது. இது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலை யில் ஆரல்வாய்மொழி-குமாரபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 காற்றாலைகள் இரவு முழுவதும் ஓடியது.

    அதிகாலையில் மேலாளர் ராபர்ட் ஜான், காற்றாலையை சுற்றிப் பார்த்தபோது காற்றாலை ஓட வில்லை. இது தொடர்பாக அவர் விசாரித்த போது காற்றாலை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதும் உள்ளே இருந்த விலை உயர்ந்த கேபிள் வயர்களை திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டது ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு யேசுவடியான் மகன் ஜெகன் மற்றும் பாபு என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், ஜெகனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். காற்றாலை திருட்டு சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.

    • மணப்பாறை அருகே வீட்டில் தூங்கிய அக்காள்-தங்கையிடம் நள்ளிரவில் கைவரிசை
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த வடுக–பட்டி கிராமம் ராஜாத்தி அம்மன் கோவில் பின் பகுதியில் வசித்து வருப–வர்கள் பாலாமணி (வயது 54), பத்மா (47). இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார்கள். அவர்களுடன் பாலா–மணி–யின் மகன் ரமணி கிருஷ் ணன் (35) என்பவரும் உள் ளார்இந்தநிலையில் நேற்று இரவு ரமணி கிருஷ்ணன் ஒரு அறையில் படுத்து தூங் கினார். சகோதரிகளான பாலாமணி, பத்மா இருவ–ரும் மற்றொரு அறை–யில் படுத்திருந்தனர். வீட்டை பூட்டி தூங்கிக் கொண்டி–ருந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர்.இந்த திடீர் சத்தம் கேட்டு சகோதரிகள் எழுந்து பார்த்தனர். கண்ணி–மைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் பாலாமணி மற்றும் அவரது தங்கை பத்மா ஆகியோரின் கழுத் தில் கிடந்த தலா 3 பவுன் தங்க சங்கிலி வீதம் 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதையடுத்து அவர் கள் நள்ளிரவில் சத்தம் போடவே அக்கம் பக்கத் தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் 2 பேர் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்து மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் அருகே, வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் நகையை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசா ணை நடத்தி வருகின்றனர்.கரூர், காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் நகுல்சாமி (வயது 66) இவர் கடந்த, 1ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத் துடன், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு, இரவு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 10 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து, நகுல்சாமி கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த புது ஒச்சலம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியவதி (வயது 56). சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கி விட்டு, நேற்று காலை வீட் டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட் டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.5000 திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து பாக் கியவதி அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது திருடு போயிருந்தது தெரிய வந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி பழைய கோட்டர்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாரி (வயது35). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது திருடு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குளிக்க சென்றவரின் ஸ்கூட்டர் திருட்டு
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அருகே, கல்லடை பஞ்., இடையப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, (வயது 35). இவர் குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் பிள்ளையார் கோவில் அருகே தன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஆற்றுக்குள் சென்று குளித்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குளித்தலை போலீசில் மூர்த்தி கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

    • திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர்.
    • ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் லல்லி (37) இவர் தினம் தோறும் சென்னை காசிமேடு பகுதிக்கு சென்று மீன் வாங்கி வந்து திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் திருத்தணி பகுதியில் இருந்து புறநகர் ரெயில் மூலமாக சென்னை காசிமேடு பகுதிக்கு மீன் வாங்குவதற்காக லல்லி சென்று கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட லல்லி இளைஞர்களை தடுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த லல்லி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
    • இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் அடிக்கடி செல்போன் திருட்டு நடந்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் நவீன்குமாரின் செல்போனை ஒரு முதியவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட விவேகானந்தன்(59) என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய செல்போனை போலீசார் மீட்டு நவீன்குமா ரிடம் ஒப்படைத்தனர். போலீசில் சிக்கிய முதியவர் அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் ஓடும் பேருந்தில் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிந்த விசாரணை

    திருச்சி,

    திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதி–யைச் சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது லேப் டாப்புடன் ெநம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் ஒரு டவுன் பஸ்சில் வீடு திரும்பினார். பின்னர் பஸ் நிலையம் வந்ததும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பார்த்தபோது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் ஓடும் பஸ்சில் லேப்டாப்பை திருடிக்கொண்டு இறங்கி சென்று விட்டனர். இதுகுறித்து குமார் கொள்ளிடம் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - காட்டுக் கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.           கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    உண்டியலில் ரூ. 5 ஆயிரம் வரை பணம் இருந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் எதுவும் இல்லை. மெயின் ரோடு பகுதியில் தான் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×