search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • சுப்பிரமணியன் வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.

    அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.

    இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

    • கைப்பையில் பாஸ்போர்ட், ஆயிரம் அமெரிக்க டாலர், இந்திய பணம் ரூ.10 ஆயிரம் உள்ளது.
    • கைப்பை மாயமானது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது அதிக்குல் இஸ்லாம். இவர் மனைவியின் சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார் . விமான நிலையத்தில் இருந்து கால் டாக்சியில் ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி சாலைக்கு வந்து விட்டு ஒரு ஆட்டோவில் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள ஒரு விடுதிக்கு மனைவியுடன் சென்றார்.

    இந்த நிலையில் கைப்பை மாயமாகி உள்ளது. அதில் பாஸ்போர்ட், ஆயிரம் அமெரிக்க டாலர், இந்திய பணம் ரூ.10 ஆயிரம் உள்ளது.

    இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.
    • இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

    தருமபுரி,

    கர்நாடகா மாநிலம், ஓங்கந்திரா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது நண்பரின் திருமணத்திற்காக இரு சக்கர வாகனத்தில் தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.

    இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

    இது குறித்து மதிகோண்பாளையம் போலீசில் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • வடசேரி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ஜவுளி கடையில் திருடப்பட்ட கார் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பென்சாம் (வயது 69). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடை ஒன்றில் துணி எடுக்க வந்திருந்தார். அப்போது தனது காரை கடையில் நிறுத்திவிட்டு துணி எடுக்க சென்றார். காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்று சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து பென்சாம் வீட்டுக்கு செல்வதற்காக காரை எடுக்க வந்தார்.

    அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பென்சாம் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டார். இதையடுத்து கடை ஊழியர்கள் பென்சாம் காரை தேடினார்கள். எங்கு தேடியும் கார் கிடைக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கார் மாயமானது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பென்சாம் காரை நிறுத்தி சென்ற பிறகு இரண்டு வாலிபர்கள் அவரது காரை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் காரை திருடி சென்றது ஏற்கனவே அதே துணிக்கடையில் வேலை பார்த்த இறச்சகுளத்தை சேர்ந்த ராஜா மற்றும் அவரது நண்பர் ராஜன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கார் மாயமானது குறித்த தகவல் அனைத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வடசேரி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ஜவுளி கடையில் திருடப்பட்ட கார் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். காரை ஓட்டி வந்த ராஜா, ராஜனையும் போலீசார் பிடித்தனர். இருவரும் பிடிபட்டது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட ராஜா, ராஜன் இருவரையும் மீட்கப்பட்ட காரையும் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ராஜா, ராஜன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் ராஜா ஏற்கனவே அந்த ஜவுளி கடையில் வேலை பார்த்ததாகவும் டோக்கனை மாற்றி கொடுத்து காரை குடிபோதையில் எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருடப்பட்ட காரை ஒரு மணி நேரத்தில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் துணிக்கடையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
    • உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.

    அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
    • சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வியாபார விசயமாக வெளியே சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து காசிராஜன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகி றார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள காமிரா பதிவையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.
    • 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் தேரோட்டம் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடஙகியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளிய எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது கடந்த மார்ச் 6 -ந் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. நேற்று பந்த சேவை, தண்ணீர் சேவை எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

    மேலும், காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதனையும் மீறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 20 -க்கும் மேற்பட்டோரின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடுப்போய் உள்ளது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். இதனால் காவல் துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் தேர்த்திருவிழா கூட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. அதில் 7 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.

    • வெள்ளி கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.
    • இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கவசம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - வடசேரி சாலை முக்கம் பகுதியில் சாலையோரம் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கிரகம் வைத்து அதில் மஞ்சள் பூசி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுமார் அரை கிலோ மதிப்புள்ள வெள்ளி முக கவசத்தை அம்மனின் முகத்தில் பதித்து இரவில் பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் முகத்தில் இருந்த வெள்ளி கவசம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேபேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் முக வெள்ளி கவசத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த சாலையில், கதவுகள் இல்லாமல் வழிபாடு செய்து வந்த கோவிலில் இருந்த, அம்மன் முக கவசத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியிலுள்ள உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் கோவிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகைப்பொருட்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் கொடுத்த பட்டியலில் இருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர் மேலும் சில பொருட்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு மொத்தமாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மளிகைக் கடை உரிமையாளரும் கடைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார். அங்கே அந்த நபரையும் காணவில்லை, மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோவிலில் இருந்தவ ர்களிடம், இன்னும் சில கோவில்க ளுக்கு பொரு ட்களை பிரித்து கொடுக்க வேண்டியி ருப்பதாகக் கூறி பொருட்களை ஒரு காரில் ஏற்றி கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று ள்ளார்.நூதன முறையில் ஏமாற்றி மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.
    • இரும்பு கம்பி திருட்டு தொடர்பாக பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கிருந்த சுமார் 30 டன் எடை கொண்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாத்தூரைச் சேர்ந்த வாசுதேவன், செங்குன்றம் ஆட்டதாங்கலை சேர்ந்த ரவி, அவரது சகோதரர் பழனி, செங்குன்றத்தைச் சேர்ந்த நாசர், தென்காசியை சேர்ந்த மாயாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியதாக மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அன்பு குமார் ஆகிய 2 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    • ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பாதிரிவேடு:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்தவர் மாங்கிலால் (வயது 49). இவர், பாதிரிவேடு அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது கடையின் இரும்பு கதவு மற்றும் ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சித்து உள்ளனர். அது முடியவில்லை. இதனையடுத்து கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை மட்டும் திருடிச் சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் கழற்றி சென்றனர்.

    அதே போல அருகே உள்ள சுமன் (39) என்பவரின் பேன்சி கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லாவை உடைத்து அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரத்தை அள்ளிச் சென்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    திருச்சி.

    பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் கார்த்திக் ( வயது 27). இவர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை பார்த்த மர்ம நபர், வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து கார்த்திக் செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×