search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • தீர்த்தவாரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணமிருந்தது.
    • போலீசார் விசாரித்தபோது.இரு வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள வாகனங்களை திருடுவதற்கான கருவிகளுடன் இருந்ததை கண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகேதீர்த்தவாரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவாகனங்கள்  காணாமல் போவதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் மரக்காணம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரையும், மற்றொரு உள்ளூர் வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வாகனங்களை திருடுவதற்கான கருவிகளுடன் இருந்ததை கண்டனர். அவர்களை பிடித்த மரக்காணம் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கணேசன் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் ஓடி வந்து பிடித்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொ ண்டு தப்பியோட முயன்றார்.

    உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய செல்போனை அங்கு நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக கணேசன் தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த முகமது அலி(வயது 34) என்பதும், திருடிய செல்போனை தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த சுடலைகுமார்(30), புதுமனை 1-வது தெருவை சேர்ந்த ரசாக் முகமது ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மைக்கேல் ஞானசேகர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடை கதவு உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    சங்கரன்கோவில் கக்கன்நகரை சேர்ந்தவர் மைக்கேல் ஞானசேகர். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மைக்கேல் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடை கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வேலுசாமி(வயது 32) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் திருடியது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 42 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறி கும்பல் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என்று கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் திருடுபோனது.

    மதுரை எஸ்.ஆலங்குளம், கமலேசுவரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (60). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.

    தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (62). இவர் ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    புதூர் மண்மலை மேடை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கலெக்டர் பங்களா அருகே நின்று கொண்டி ருந்தார். அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பியது.

    மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60). இவர் டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டி ருந்தார். அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள்(74). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடம் மர்மகும்பல் 4 பவுன் நகைைய பறித்து தப்பியது.

    ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவு. இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடமும் மர்ம கும்பல், 5 பவுன் நகையை பறித்து தப்பியது. ஆனையூர் செந்தூர் நகர் சோனைமுத்து மனைவி நாகம்மாள்(70). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தபோது 3 பேர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகம் (53). இவரிடம் மர்ம கும்பல் 9 பவுன் நகையை பறித்து தப்பியது. மதுரை அருகே உள்ள திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தி (64). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தமுக்கம் பஸ் நிறுத்தம் வந்தார். அவரிடம் 2 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இவ்வாறு மதுரை மாநகரில் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதில்ெ ெதாடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதிகளில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் குற்றவாளிள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டை பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பிக்பாக்கெட் அடித்தவர் கைது

    தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் நின்று கொண்டி ருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் செந்தில்தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்ப முயன்றார். செந்தில் தேவன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விளக்குத்தாண் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் செல்லூர் மேலதோப்பை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். சத்துணவு கூடம் ரோட்டில் 3 பேர் கும்பல் பால்பாண்டியை வழிமறித்து கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பியது. இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார்.
    • சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்ப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி சுதா (46) மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் மதுரை மாவட்டம் தத்தனேரி செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மனைவி தமிழ்ச்செல்வி (55), மற்றும் அேத பகுதியைச் சேர்ந்த ராசு மனைவி மூக்காயி (70) ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர்.

    • கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டுப் பாதை மற்றும் புதிய படி கட்டுப்பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை யொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத் தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர்.அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கேமரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டி உள்ளனர்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மலைக்கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் பகுதியில் உள்ளவீடு உள்ளிட்ட 3 இடங்களில் நகை, பணம் திருடப்பட்டது.
    • 5½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் பகுதியில் உள்ளவீடு உள்ளிட்ட 3 இடங்களில் நகை, பணம் திருடப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வீடுகளுக்குள் புகுந்து திருடிய நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வீடுகளுக்குள் புகுந்து திருடிய மர்ம ஆசாமி திருப்பதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருப்பதி விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவனை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்த போது அவன் கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளியை சேர்ந்த பூவரசன் (வயது 23), என்பதும் திருப்பூரில் தங்கி இருந்து வீடுகளில் திருடிய நகை பணத்துடன் திருப்பதி தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் திருப்பதியில் மொட்டை போட்டுவிட்டு வெளி மாநிலங்களில் தலைமறைவாக இருக்க முடிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்து அவனிடம் இருந்த 5½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • முகமது சமீர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
    • விசாரணையில் மோட்டார் சைக்கிளை ராஜேஷ்ராம் திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    பேட்டையை சேர்ந்தவர் முகமது சமீர் (வயது20). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது மோட்டார் சைக்கிளை நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்ராம் (30) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-லேப்டாப் திருட்டு போனது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழ்க்குடிகாடு மேற்குத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன் டிரைவர். இவரது மனைவி சுசிலா(வயது 47). அறிவழகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். சுசிலா வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா, இது குறித்து மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்
    • இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்றும் கண்டுபிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. விசாரணையில் 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் எனவும், 2 பேரும் தொட்டி குடிசை சார்ந்த ரகுபதி (வயது 22) ,சஞ்சய் (21) என்பதும் தெரிய வந்தது. திருடிய மோட்டர் சைக்கிள் மேல மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் (21) என்பவரது வாகனம் என தெரிய வந்தது.இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் ரகுபதி, சஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
    • வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண்பிரசாத் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 42). இவர் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கானார்பட்டியில் உள்ள வீட்டில் இவரது தாய் மற்றும் தங்கை வசித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 29-ந்தேதி திருச்சியில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நேற்றிரவு அருண்பிரசாத் சொந்த ஊரான கானார்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×